பக்கம்:பாலைக்கலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 59 25. தூதர் வந்து சொன்னாரே! (இளவேனில் காலம் தொடங்கவும் வந்து விடுவேன்' என்று உறுதிகூறிப் பிரிந்து, அரசியல் கடமையை மேற்கொண்டவனாகச் சென்றான் ஒரு கணவன். இளவேனில் வந்த பின்னரும், அவன் வரவில்லை. அதனால், அவள் துடிதுடித்துப் புலம்ப, அவள் தோழி, 'தூது வந்து சொன்னதையும் மறந்தாயோ' எனக் கூறித் தேற்றுகிறாள்.) 'ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும், பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும், மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞ்று ஆர்க்கும் காஞ்சியும், ஏனோன் போல், நிறம் கிளர்பு களுலிய ஞாழலும், ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு 5 தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல, போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற, நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக. பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து, தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் -10 ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர். திசை திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை, வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் - நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம் 15 இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர். அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி துதல் வேறாகி, திறல்ா சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் - ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்.'20 என, நீ - தெருமரல் வாழி தோழி! நம் காதலர், பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் செரு மேம்பட்ட வென்றியர்; 'வரும் என வந்தன்று, அவர் வாய்மொழித் துதே. 25 ஒப்பற்ற குழைகளை அணிந்த பலதேவனைப் போல வெண்ணிறப் பூங்கொத்துக்களால் சேர்ந்திருக்கும் மராமரம்: பருதியஞ் செல்வனான கதிரவனைப் போல, பூக்கள் இதழ் விரிந்தவாய் நிரம்பியிருக்கும் செருந்தி; சுறாமீனைக் கொடியாக உடைய மதனனைப் போலக் கரியவாய் வண்டுகள் ஆர்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/67&oldid=822061" இலிருந்து மீள்விக்கப்பட்டது