பக்கம்:பாலைக்கலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 61 போயினானே என எண்ணி வருந்துகிறாள் தலைவி. அவளுக்குக் காலத்தினது வரவைத் தூது வந்ததெனச் சொல்லி, ஆறுதல் கூறுகின்றாள் தோழி. சொற்பொருள்: 1. ஒருகுழை யொருவன் - பலதேவன். 2. பருதியம் செல்வன் ஞாயிறு. நனை - அரும்பு, ஊழ்த்த - மலர்ந்த, 3. மீனேற்றுக் கொடியோன் - காமன். மிஞ்று - வண்டுகள், 4. ஏனோன் - தம்பி, காமன் தம்பி சாமன். 7. பொருகரை - நீர் அலைக்கும் கரை.9.புதிது - புதிய தேன்.11. ஒல்குபு - ஆள்வோரால் அலைக்கப் பெற்று. உலையாது- அவர் வருந்தாவாறு;12. விருந்து நாடு- புதிய அயல்நாடு.13 தேன்-தேனிக்கள். திருமருதமுன்துறை - வையை ஆற்றில் அமைந்த திருமருதத்துறை. திசை திசை தேனார்க்கும் திருமருத முன் துறை என இதன் சிறப்புக் கூறப்பெறுகின்றது. வையையில் புதுப்புனல் ஆடிக் களிக்க விரும்பிய நினைவு இது. 14. வசைதீர்ந்த குற்றம் அற்ற 15, நசைகொண்டு - தன்னை விரும்பி. 18. திறல் சான்ற பெருமை மிக்க 19, ஊறு - கேடு. 20, வெஃகி அகன்ற வெஃகிய அரசன் அகன்ற 22 தெருமரல் - மனங் கலங்காதே. பொருமுரண் - போர் செய்யும் மாறுபாடு. எழுந்தவர் செருமேம்பட்ட எழுந்த பகைவரோடு மேற்கொண்ட போரில் மேன்மையுற்ற. 26. நாம் விரும்பும் காதலர்! (குறித்துச் சென்ற இளவேனில் வரவும், அவன் மீண்டும் வராததால் தலைவி புலம்ப, முடிவிலே அவனும் வந்துவிட, அவனைக் காட்டித் தோழி தலைவிக்கு உரைக்கின்றாள்.) 'ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த, பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின், மாதரார் முறுவல் போல், மண மெளவல் முகை ஊழ்ப்ப; காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு 5 தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற: பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு, ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில், நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள, - நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க, 10 கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய, புலம் பூத்து, புகழ்பு, ஆனாக் கூடலும் உள்ளார்கொல்? கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற, தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/69&oldid=822063" இலிருந்து மீள்விக்கப்பட்டது