பக்கம்:பாலைக்கலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கலித்தொகை மூலமும் உரையும் ஒன்னாதார்க் கடந்து அடுஉம், உரவு நீர் மா கொன்ற, 15 வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்? மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள, பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க, தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்? 20 என ஆங்கு, நோய் மலி நெஞ்சமோடு இணையல், தோழி! நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின், காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என, ஏமுறு கடுந் திண் தேர் தடவி, 25 நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே. அறநெறிகளை நன்றாக உணர்ந்து, கொடுப்பதிற் கொஞ்ச மேனும் குறையே காட்டாது நடந்து வரும், மாசற்ற ஒருவனுடைய செல்வமானது, நாளுக்கு நாள் செழித்துப் பெருகும். அச் செல்வத்தைப் போலவே, ஆற்றின் இரு கரைகளிலும் உள்ளவான மரங்கள் எல்லாம் பூத்துக் குலுங்குகின்றன. ஆடவர் எளிதிலே மனம் பேதலிக்குமாறு பேசும் மடப்பத்தையும், மான்பிணை போன்ற மிரண்ட நோக்கினையும் உடைய மாதர்கள் புன்முறுவல் செய்வதுபோல, முல்லைச் செடிகளில் அரும்புகள் எங்கணும் அரும்பியுள்ளன. கலவிக்க்ளியிலே திளைத்த மகளிரின் கூந்தலைப்போல, ஈரமணலிலே தாதுகளும் தளிர்களும் விழுந்து கிடக்கின்றன. பேதையான அமைச்சனின் திறனற்ற செயலால் பெருமையழிந்த அரசனின் நாட்டிலே, வேற்றுப் படைகள் வந்து அழித்துக் கெடுப்பதுபோல, இளவேனிலும் என்னை வந்து தாக்கித் துன்புறுத்துகின்றதே! நிலத்திற்கு அழகுதரும் மரங்களின் மேலிருந்து குயில்கள் கூவுகின்றன. என்னை நோக்கி அவை எள்ளி நகையாடுவது போன்றுள்ளது. அழகாக ஆபரணங்களைப் பூட்டிய மங்கை யரின் அழகு அவருக்கு மகிழ்வூட்டும் போதாவது, அறிவு தெளிந்து, எம்பாற் பெற்ற புகழ்மிகுந்த கலவியை அவர் நினையாரோ? நன்மைப் பொலிவுடன் விளக்கிய நம் அழகு, இவ்வாறு அழிந்து போமாறு நம்மையேன் அவர் மறந்து விட்டார்? நம் சாயல் அழிந்துவிடவே, நம்மைக் கேலி செய்வன போல மயிலினமும் ஆரவாரத்துடன் ஆடுகின்றனவே! ஊரும் ஆரவாரித்து அலர் தூற்றும் வண்ணம் அவரும் நம்மை மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/70&oldid=822065" இலிருந்து மீள்விக்கப்பட்டது