பக்கம்:பாலைக்கலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி - 63 விட்டாரே? பகைவரை மேற்சென்று வெற்றி கொள்ளுபவன் முருகன், கடலிடையிலே மாமரமாகி மறைந்து நின்ற சூரனை, வெற்றிவேலால் எறிந்து கொன்றவனும் அவன், திருப்பரங் குன்றின்மேல், அவனுக்காக நடைபெறும் விளையாட்டைக் கூட, அவர் வந்து காணுதற்கு விரும்பாரோ? மை தீட்டிய மலர்போன்ற கண்களிலே மயக்கத்தை ஊட்டிப் பொய்யாக எம்மைக் கூடி இன்புற்றவர், நம்மைத் தான் மறந்து விட்டார், வையையாற்றின் மணலிலே பரத்தையர் கூட்டம் அமர்ந்து ஆடுகின்ற, புதுப் புனலாட்டு விழாவின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்வதைக்கூட அவர் நினையாரோ? நோய்மிகுந்த நெஞ்சோடு இவ்வாறு கூறி வருந்தாதே தோழி! நாமில்லாது புலம்புவாளே! நடுக்கஞ் செய்யும் இளவேனிற் காலமாயிற்றே! காமவேள் விழா வந்தால் மிகவும் கலங்குவாளே! என்று எண்ணி, வலிமைமிகுந்த தேரினை விரைந்து செலுத்தி, அதோ நாம் விரும்பும் காதலரும் வந்துவிட்டார்; பாராய்! . . வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டு’ என்றது, திருப்பரங்குன்றத்து நிகழும் முருகனின் திருவிழாவை. சொற்பொருள்: தீங்கரை-இனிய நீரை உடைய ஆற்றங்கரை. நந்த தழைக்க. 3. பேதுறு - கேட்டார் அறிவை மயக்கும். 4. ஊழ்ப்ப அலர.S. கதுப்பு கூந்தல். கழல்குபு - கழன்று உதிர்ந்த, 8. இறுத்தந்தது வந்து தங்கிற்று. 1. கலம் பூத்த அணிகளால் அழகுபெற்ற 12 புலம்பூத்து அறிவால் மிக்கு 18. பரிவுண்ட அன்பு கொண்ட 22 நோய்மலி - நோய்மிக்க ५ 27. என்ன அருளோ? (இளவேனில் வந்தும், அக்காலத்து வருவதாகச் சொல்லிச் சென்ற தன் காதலன் வராதுபோகவே, பலவாறு சொல்லிப் புலம்புகிறாள் ஒரு காதலி. அவள் மனந்தேறுமாறு, அவள் தோழி, அவளுக்கு ஆறுதல் உரைக்கின்றாள்) 'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும் நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல், தோடு அவிழ் கமழ் கண்ணி தையுட புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற, செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு. 5 தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/71&oldid=822066" இலிருந்து மீள்விக்கப்பட்டது