பக்கம்:பாலைக்கலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 65 இல்லை. 'இவள் தாங்கமாட்டாளே என்றும் கருதாது, இரக்கமற்ற நெஞ்சுடன் பசப்பும் நுதலிலே படர்கின்றது. அவர் நம்மீது கொண்ட அன்புதான் என்னவோ? மணலிலே நீர் நிறைந்துள்ளது. பூக்களிலே சுரும்பினம் தேனுண்ணுகின்றன. மாமரத்திலே இளந்தளிர்கள் துளிர்த் துள்ளன. அவரோ நம்மை அடியோடு மறந்திருக்கின்றார். மலர்போன்ற கண்கள் ஒயாது அழுது புலம்புகின்றன. காம நோயோ மிகுகின்றது. பைந்தொடி அவர் அருள்தான் யாதோ? ஆபரணங்கள் அணிந்தவளே! அப்படி எல்லாம் சொல்லாதே. தொலைவிலே சென்றவருக்கு, நாம் தூது சொல்லி ஆள் விடவும் வேண்டாம். நம்மைவிட நம்மைப் பிரிந்து இருப்பதை அவரும் பொறுக்க முடியாதவராவர். வருந்தி என்ன செய்வது? விரைவில் அவரும் வருவார்; அதுகாறும் நீயும் பொறுத்திருப்பாயாக! சொற்பொருள்: 1. சினைய கோட்டுப்பூ சுனைய நீர்ப்பூ. 6, தொய்யகம் - தலைக்கோலம் எனும் அணி, கதுப்பு கூந்தல். துவர்மணல் - சிவந்த மணல் 7. ஆலும் - கூவும். பேதுறுஉம் - மயக்கம் செய்யும். 10. படர் - துன்பம். அவலநோய் - துயர் மிகும் காமநோய்.11.அளி-அருள். என்னோ- என்ன பயனைத் தருமோ? அல்லது எத்தன்மையதோ? 13. அயல் - அயலார். 14. மதலை - பற்றுக்கோடு, மதன் ஆற்றல்.18. புலம்பு - பிரிவுத்துயர். 24. பரிந்து - வருந்தி. 28. இனிமையாகப் பேசு! (கணவன் சொன்னபடி திரும்பி வராத வேனிற்காலத்துத் தன் தோழியிடம் சொல்லி வருந்தினாள் ஒரு தலைவி. அவன் வந்ததும், தோழி, முன் சொன்னதையெல்லாம் திரும்பச்சொல்லி, இனிச்சிரித்து இனிதாகப் பேசி மகிழ்வாயாக’ என்று, தலைவியை நகையாடுகின்றாள்.) 'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின், அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல், பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர; வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள; 5 இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார, மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல், ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/73&oldid=822068" இலிருந்து மீள்விக்கப்பட்டது