பக்கம்:பாலைக்கலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலித்தொகை மூலமும் உரையும் சேயார்கண் சென்ற என் நெஞ்சினை - சின்மொழி! - 10 நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நிவி, வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி, நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம். போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச் சூழ்பு ஆங்கே - சுடரிழாய்! - கரப்பென்மன்? கைநீவி 15 வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம். தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர் - வடு நீங்கு கிளவியாய்! - வலிப்பென்மன்? வலிப்பவும், நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட 20 கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம். என ஆங்கு, வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப் பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம் அருந் துயர் களைஞர் வந்தனர் - 25 திருந்து எயிறு இலங்கு நின் தேமொழி படர்ந்தே. எழில் மிகுந்த ஒரு காதலி, தான் கருப்பம் கொண்ட போது, மசக்கையால் வாடினாள். அவளது பழைய அழகும் மாறியது. அதுகண்டு வருந்திய சுற்றத்தார், அவள் ஒரு குழந்தையைப் பெற்றதும் மனமகிழ்ந்து, அவளைப் போற்றினர். அதை போலப் பல விளைபொருள்களையும் உதவுவது நிலம்; அது பசுமை தீர்ந்த தன் நிலைமாறி, எங்கணும் புது நலத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது. வளையணிந்த இள மகளிர் வண்டலிழைத்ததுபோல, ஆற்று மணலிலே நீர் சென்ற வடுக்கள் விளங்குகின்றன. இளம்பெண்கள் வகுப்பெடுத்து தலைவாரி வருவதுபோல, கருமணல் மேடுகளினூடே நீர் தெளிந்து ஊடறுத்தச் செல்கின்றது. மாந்தளிர்களின் மீது மாமை நிறம் படர்ந்தாற்போலப், பூந்தாதுகள் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. இளவேனிற் காலமும் வந்துவிட்டது. சிலவாகிய சொற்களே பேசும் என் தோழியே தொலைவிற் சென்றவர்பால் சென்றுவிட்டது என் நெஞ்சு, அந் நெஞ்சினை, நீ கூறும் எல்லைக்கு அப்பாலும் நான் செல்ல விடாது பொறுமையோடு சகித்துக் கொள்வேன்! ஆனால், இதழ் விரிந்து, பனித்துளிகளைச் சுமந்து தோன்றும் பல மலர்களின் மீதும், படர்ந்து வரும் வாடைக் காற்றானது, என் நிறையைத் தாக்கிக் கலங்கச் செய்கின்றதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/74&oldid=822069" இலிருந்து மீள்விக்கப்பட்டது