பக்கம்:பாலைக்கலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 67 விளங்கும் அணியுடைய தோழியே! இளவேனில் வந்த தென்றும் நினையாதவராய்ப் பிரிந்திருக்கும் அவர்மேல் மனம் செலுத்தி வாடும் நிலையை, வேண்டுமென்றே முயன்று மறைக்கவும் முயல்வேன். கதிரவனின் கதிர் மலர்த்திய பூவிதழ்களிலே வண்டினம் அமர்ந்து தேனுண்டு பாடிவருகின்ற மாலைக்காலம் வந்து, என் வருத்தத்தைத் துண்டி விடுகின்றதே! குற்றமற்ற சொல்லையுடைய தோழியே! என் கைவளைகளைக் கழன்றுவிழச் செய்தவர்.பால் சென்று தங்கும் என் ஆருயிரைப் போகாதே அங்கு என மீட்டுக் கொணரவும் முயல்வேன்! ஆனால், வண்டுண்ணும் மலர்ந்த மலர்களின் மணமும், நிலா எரிக்கும் இராக்காலமும் வந்து, என்னை வாட்டுகின்றதே! - என்றெல்லாம் பலவாறு சொல்லி வருந்தியிருந்தாயே! நின் வளைகள் நீங்கப் பிரிந்து, அயல்நாடு சென்று பொருள் தேடப் போனவர், அந்தப் பொருள் முயற்சியைப் பின்னும் தொடர்ந்து செய்தற்கு நினைக்காது, புறப்பட்டு, நம் துயர் தீர்க்க இதோ வந்துவிட்டனர். இனிய வார்த்தைகள் படர்ந்து, நின் வாயிதழ்களிடையே நின் திருந்தின எயிறுகள் தோன்ற, இனியேனும் நீ தான் மகிழ்வுடன் வாழ்வாயாக! சொற்பொருள்: 1. தொல்லெழில் - பண்டைப் பேரழகு வயவு - கருவுற்ற மகளிர்க்கு உண்டாகும் மசக்கை நோய் 2. அல்லாந்தார் - அவள் நோய் கண்டு வருந்திய சுற்றத்தார் 4. புல்லிய பற்றிய. புனிறு-தூய்மைக் குறைபாடு.12. விரிபு-விரிந்து17. இயன்மாலை - ஒலிக்கும் மாலைக்காலம். 18. வலிப்பேன் - போகாதவாறு தடுத்து நிறுத்துவன். 20. வாய்விட்ட - மலர்ந்த 24. பின்னோக்காது ஏகி விரைந்து தொழிலாற்றி. 25. சுளைஞர் - போக்குதற் பொருட்டு. 29. திண்தேர் அயர்மதி: (ஒரு தலைவி, தன் தலைவன் சொன்னபடி வராததால் துன்புற்றுப் புலம்பினள். அதுகண்டு இரங்கிய பாணன், அவள் தலைவன் இருக்கும் போர்ப் பாசறைக்குச் சென்று, அவனிடம் இப்படிக் கூறுகின்றான்.) 'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள விரிந்து ஆனாச் சினை தொறுஉம், வேண்டும் தாது அமர்ந்து وبگا புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும், ويتني இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான் - துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி.இ 5 மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/75&oldid=822070" இலிருந்து மீள்விக்கப்பட்டது