பக்கம்:பாலைக்கலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கலித்தொகை மூலமும் உரையும் ‘வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில் குயில் ஆலும் பொழுது எனக் கூறுநர் உளராயின். பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ - 10 'ஆனாச் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை, தேன் ஆர்க்கும் பொழுது எனத் தெளிக்குநர் உளராயின். உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ - பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி - சூழ்ந்து, 15 அறல் வாரும், வையை என்று அறையுநர் உளராயின்.' என ஆங்கு, | தனியா நோய் உழந்து ஆனாத் தகையவள் - தகை பெற, அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி - பணிபு நின் காமர் கழல் அடி சேரா 2O நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே. “அருந்தவம் செய்தவர்கள் எவ்விடத்தும் இன்பத்தையே பெற்று வாழ்வார்களல்லவோ அதுபோல, அழகாக மலர்கள் விரிந்து விளங்கும் மரக்கொம்புகள் தோறும், வேண்டிய அளவு வரையும் அமர்ந்து தேனுண்டு, களிப்புடன் வண்டுகளும் ஆரவாரித்திருக்கும். அவற்றுடன், கருந்தும்பிகளும் தம்துயர் தீர்ந்தவாய்த் தேனுண்டு மகிழ்ந்திருக்கும். அத்தகைய இளவேனிலும் இதோ வந்துவிட்டது! "இரவுக் கொடுங்கடலைத் தூக்கம் கொள்ளாது நீந்திக் கடந்து, யாமோ கரைகாணாது வருந்துகின்றோம், மடுக்களிலே வீழ்ந்து நீராடி, மயிலனைய சாயலுடைய பரத்தையரின் இன்பத்தை உண்பவனாக, அவனோ நம்மை மறந்து வாழ்கின்றான். "வெயிலின் ஒளியே கொஞ்சமேனும் படாதவாறு குளிர்ந்த சோலைகள் செழித்து மலர்களால் நிறைந்துள்ளன; குயில் இனிதாகக் கூவுகின்றது; இளவேனிற் காலமும் வந்து விட்டது; இதை அவனிடம் கூறுபவர் எவரேனும் இருந்தால், அவன் அவ்வாறு மறந்திருப்பானோ? "பெரும் புகழுடைய மதுரையிலே, அரும்பவிழும் மணமுல்லையிலே தேன் துளிர்க்கும் இளவேனிற் காலம் இது. இதனை அவனுக்குத் தெளிவாகச் சொல்பவர் யாரும் இல்லையே! இருந்தால், பலநாளும் நாம் துன்புற்று வருந்தவும், தான் மூங்கிலின் எழிலும், அணையின் மென்மையும் மான் நோக்கும் உடைய பரத்தையரோடு கூடியிருப்பவன், என்னையும் மறந்து அங்கேயே தங்கி இருப்பானோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/76&oldid=822071" இலிருந்து மீள்விக்கப்பட்டது