பக்கம்:பாலைக்கலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 69 "பெறுதற்கரிய இளவேனில் வந்தது. பூங்கொத்துக்கள் எங்கும் நிறைந்துள்ளன. ஆற்றுமேடுகளைச் சூழ்ந்து வையையிலே வெள்ளமும் செல்லுகிறது! இதனை அவனிடம் சென்று சொல்பவர் எவரும் இல்லையே! இருந்தால், அவனோடு கூடி மகிழ உரிமையுடைய யாம் ஒளி கெடும்படியாக, இந்தக் காமன் திருநாளிலே, அவன் பரத்தையருடன் கூடிக் காமக்களி கடத்திக் கொண்டிருப்பானோ?” தணியாத நோய் கொண்டு நின் மனைவி இவ்வாறெல்லாம் புலம்பி வருந்துகின்றாள். அவள் மீண்டும் தன் அழகு பெற வேண்டாமோ? அழகான நின் நெடுந்தேரை இப்போதே நின் வீடுநோக்கிச் செலுத்துவாயாக பணிந்து நின் அழகிய திருவடிசேராத பகைவர், நீ அவர்க்கு விளைக்குந் தண்டனையை எண்ணி எண்ணி நடுங்குவதைப் போல, அவள் தன் உள்ளமும் நடுங்குகின்றாள். அதனால், அவளைக் காத்தற் பொருட்டாக நீயும் விரைந்து செல்வாயாக' சொற்பொருள்: 3. புலம்பு - தனிமை, 4. இருந்தும்பி - கரிய தும்பி, இறைகொள தங்க தொழுவை நீர் நிலை. 11. ஆனாச் சீர்க்கூடல் புகழால் மிகுந்த மதுரை. 13 உறலியாம் அவனை அடைதற்குரிய யாம்.19. அயர்மதி செலுத்துவாயாக 21. தெவ்வர் - பகைவர். 30. கொடி எழுத்தது! (பனிக்காலத்திலும் தலைவன் வாராதுபோகத், துயரத்தால் துடித்த தலைவிக்கு, அவன் வருவதைக் காட்டித் தோழி கூறியது இது) 'கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற, நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக, பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன, 5 மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால், கையாறு கடைக்கூட்டக் கலக்குறுஉம் பொழுதுமன் - "பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை. மயங்கு அமர் மாறு அட்டு, மண் வெளவி வருபவர், தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ - 10 பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு, வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை? தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு, வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/77&oldid=822072" இலிருந்து மீள்விக்கப்பட்டது