பக்கம்:பாலைக்கலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலித்தொகை மூலமும் உரையும் நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு, 15 தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை? பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ - புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பணி? 20 என ஆங்கு, வாளாதி, வயங்கிழாய்! வருந்துவள் இவள் என, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மீளி வேற் தானையார் புகுதந்தார் - நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே. 25 பெருகிவரும் வையையாற்று நீரானது கால்களின் வழியாக எங்கும் பாய்தலால் பாண்டியனின் நாடெங்கும் அழகு பெற்றன. குளங்களின் அயற்புறங்களிலே மழைநீர் சென்று சேர்ந்ததால் படிந்த நுண் மணல்கள் காணப்படுகின்றன. அந்த மணல் வடுவினை மறைத்து மூடுவதுபோல, ஈங்கைப்பூக்கள் வாடி உதிர்ந்து வீழ்கின்றன. பிரிந்தவரின் நுதல்போல முன்னர்ப் பூத்த பீர்க்கம் பூக்கள், இப்போது எங்கும் காணப்படவில்லை. அதற்கு மாறாகக் காதலரைக் கூடியவரின் முகம்போலப் பொய்கை களிலே தாமரையின் செவ்விய புதுப்பூக்கள் மலர்ந்துள்ளன. உடலை வருத்திய பனிக்காலத்தோடு, மேல்நின்ற வாடைக் காலமும் பிரிவுத் துயரை மிகுவிக்கின்றன! இந்த இளவேனிற் காலத்து வருவேன்' என்று அவர் சொல்லிச் சென்றனரே! யாம் பொய்யேம் எனப் பொழுதும் முறையாக வந்தது; உறுதி கூறிய அவர் மட்டிலும் வரக்காணேனே! ஆயிழையே! எவ்வாறு அந்தத் தனிமையை இனியும் பொறுப்பேனடி? பயன் நிறைந்த பல்கதிர்களையும் பால்போல நிலவும் பொழிகிறது. சில்லென்று வாடையும் அசைந்துவந்து வீசுகிறது. இவை எல்லாம் என் நோயை மிகுவிக்கின்றனவே! பகைவரைப் போரிலே வென்று, அவர் நாட்டையும் கவர்ந்துகொண்டு, யானைமீதமர்ந்து அசைந்துவரும் அவன் அழகினை, யான் அதுவரை உயிரோடிருந்து காண்பேனோ? அங்ங்னம் காணவிடாது, இக்காலம் என்னைக் கொன்றுதான் விடுமோ? 4. வலசாரியாகக் களத்திலே சுற்றி வெற்றி தந்த குதிரையின் மேலேறி, வாளால் பகைவரை வென்று வருவார் எம் காதலர். கரும்புப் பூக்கள் நிறம் கெடவும், என் தோள் நடுங்கவும், நான் வீட்டினுள் செல்லவும் தூற்றிக் கொண்டிருக்கின்றது இத் தூறல். இது, அவர் வரும் அழகைக் காண விடுமோ? அல்லது, அதற்குள் என் உயிரையே குடித்து விடுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/78&oldid=822073" இலிருந்து மீள்விக்கப்பட்டது