பக்கம்:பாலைக்கலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ _. —- –- —" -" To -- "-- -عت تیاـ ۔ے____ 72 கலித்தொகை ഋജു உரையும் உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும், புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் - நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம், போல? பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம் இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய 15 காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் - தூது வந்தன்றே, தோழி! துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே. கத்தரிகையால் ஒழுங்காகக் கத்தரிக்கப்பெற்று, கார் மேகத்தின் அழகையும் பெற்ற மகளிரின் கூந்தலைப் போலக் கரு நிறமுடன் விளங்கியது, நீர் வடிந்துபோன பின்னர்த் தோன்றிய கருமணல். கூந்தலை முடித்துப் பொன்னாலான நகைகள் சூடியவாறுபோல வேங்கைப் பூக்கள் அதன்மேல் உதிர்ந்து கிடக்கின்றன. நல்ல பெளர்ணமி நாளிலே, அழகான மகவை ஈன்றவளின் மேனியின் திதலை போலப் பளபளவென்னும் தளிர்களை மரங்களும் துளிர்த்தன. ஆன்றோரின் அடக்கம் போல, அதுவரை அமைந்திருத்த மரங்களிலே மணமலர்கள் பூத்துக் குலுங்கின. வல்லவன் யாழிசைப்பதுபோல, வண்டினங்கள், புதர்களில் இசை பாடிக் கொண்டிருந்தன. பெண்கள் நடனமிடுவது போல, மரக்கிளைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பொருளின் தன்மையை உணர்ந்தவர் வரையாது வழங்குவது போல, மரங்கள் பூந்தாதுகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. கலவியிலே தழுவிக் கிடக்கும் காதலுடையார் போலப் பூங்கொடிகள் பின்னிப் பிணைந்து விளங்கின. இவையெல்லாம் காதலரால் விரும்பப்பட்டுக் கூடிவாழும் மகளிர்க்கு நன்றாகத் தானிருக்கின்றன. ஆனால், அந்த இளவேனில், என்போல் காதலனைப் பிரிந்து நோயுற்றிருப்பவளுக்குத் துயரத்தையன்றோ தருகின்றது! என்ன செய்வேன்? தோழி! அருவிக் கரையிலே நின் பல்வரிசைபோல அரும்பி நிற்கும் முல்லைப் பூக்கள், மணம் கமழும் உம் கூந்தலிலே, எம்மைச் சூட்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறுவன போல மலர்ந்திருக்கின்றன. அதுவல்லாமலும், பசந்தவருடைய வருத்தந்தரும் காம நோயையும், தனக்குப் பகை என்று கருதிப் போக்கி, வெற்றி கொள்பவர் நம் காதலர். நம் இனிய உயிரை வாழ்விக்கும் மருந்தினைப் போல, நின் துயர் தீர்க்கும் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே, தூதுவன் வந்து அவர் வரவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/80&oldid=822076" இலிருந்து மீள்விக்கப்பட்டது