பக்கம்:பாலைக்கலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலித்தொகை மூலமும் உரையும் இரங்கு இசை மிஞ்றொடு தும்பி தாது ஊத - தூது அவர் விடுதரார் துறப்பார்கொல்? - நோதக. இருங் குயில் ஆலும் அரோ.' 25 6T60s ஆங்கு, - - புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி, நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட, நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி, மாலை தாழ் வியன் மார்பர் துணைதந்தார் - 30 கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே. வேணலால் வாடிக்கிடந்த நிலத்திலே இளவேனில் வந்ததும், பசுமை வீறுடன் எழுந்தது. அந்தக் காட்சியைக் கண்டு மகிழ விரும்புவதுபோல, நீரற்று கிடந்த தன் தூக்கம் நீங்கிக் கண்விழித்து, எம்மருங்கும் கால்வழியாகப் பாய்ந்து, ஆறும் நீருடன் விளங்கிற்று. குளங்களெல்லாம் நீர்ப்பூக்களால் நிறைந்து அழகு பெற்றன. முதிர்ந்த இதழ்கள் நீருள் உதிர்ந்து விழுகின்ற காட்சி, தெளிவான கண்ணாடிப் பாத்திரத்தினுள்ளே மணியை இட்டது போன்றிருந்தது. கரையோர மரக்கிளைகளிலே குலுங்கும் புதுமலர்களின் நிழல், நீரினுள்ளும் தோன்றிற்று. அதனைப் பூக்கள் என்றே மயங்கிய வண்டினம், நீரைச்சுற்றி வட்டமிட்டு ஆரவாரித்துக் கொண்டிருந்தன. மணி மணியான அரும்புகளைத் தோற்றுவித்து, மரங்கள் எல்லாம் பூப்பந்தர் இட்டவை போல விளங்கின. காதலரைக் கூடி மகிழும் கன்னியர், தாம் அவரை அணைத்த கையை நெகிழவிடாமற் பின்னிக் கிடந்தனர். இவ்வாறு இளவேனில் வந்தபோதிலும், நம் காதலரை வரக்காணேனே! மலர் அழகுடன், மைதீட்டி விளங்கும் என் கண்கள் அழுது புலம்பவும், என்னை விட்டுப் பிரிந்தாரே! அவர் இன்னமும் திரும்பி வரவில்லையே? இலவமரங்கள், நெருப்பின் உருவத்தைத் தம்மேல் கொண்டிருப்பது போலச், செந்நிற மலர்களுடன் விளங்கின. பொரி சிதறியது போலப் புங்க மலர்கள் உதிர்ந்து கிடந்தன. புது மலர் நிறைந்த கோங்க மரங்கள், பொன் துளினைச் சிதறினதுபோலத் தாதுகளைச் சிதறின. தனித்திருப்பவரை வெறுத்து ஒதுக்கித் தள்ளி, எள்ளி அலர்தூற்றி ஆர்ப்பது போல, இளவேனிலும் இங்கே வந்தது. அதனை எண்ணி, என் அழகு அழிந்துவிடாமல் காப்பதுபோலப் பசலை என் உடல் முழுதும் மூடிக் காத்துக் கிடக்கின்றது. மலர் சூடிச் செல்லும் என்னைக் கண்டு, நாமும் மலர் சூடக் காலம் இன்னமும் வரவில்லையே?’ என்று முன்னர் நொந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/82&oldid=822078" இலிருந்து மீள்விக்கப்பட்டது