பக்கம்:பாலைக்கலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 75 வாடியிருந்தன கொம்புகள். அவை, இப்போது எம்மைக் கண்டு நகைப்பன போல, மலர்களை நிறையச் சூடிக்கொண்டிருக் கின்றன. அதனைக் கண்டு நைந்து வாடி உருகிவிடுவது போல, என் நெஞ்சம் அழிகின்றதே நம்மை இகழ்ந்து தாமும் மரக்கிளை களுடன் சேர்ந்து அசைந்தாடுவன போல, மயில்கள் அசைந்து ஆடுகின்றன. கைவளைகள் கட்டுக்கும் அடங்காமல் உதிர்ந்து விடுவன போலிருக்கின்றன.என் கண்களைப் போலவே, மழையும் விடாது துளியாகத் தூறிக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலைமையிலும் அவர் வரவில்லையே! இந்த நோய் இனி அதிகரிக்கத் தான் செய்யுமோ? - யாழின் இனிய இசை நாதத்தை அங்கங்கே நிறுத்திச் சுவை சேர்க்கும் சூழலின் நாதம். அதுபோல, வண்டுகளின் ஒலியோடு இணைந்து, தும்பிகளும் தாது ஊதிப் பாடுகின்றன. நம்மை மேலும் நோவு செய்வன போலக் கருங்குயில்களும் கூவுகின்றன! இவ்வளவு தூரம் நாம் துயர்கொள்ள, விரைவில் வருவேன்’ எனத் தூதுகூட அனுப்பாமல், நம்மை அவர் அறவே மறந்தாரே! நம்மை விட்டு முற்றிலும் நீங்கியே அவர் போய்விடுவாரோ? இதைக் கேட்ட தோழி சொல்லுகிறாள்: "இவ்வாறெல்லாம் மனம் வெதும்பி ஏனடி வருந்துகின்றாய்? நீலமலர் மைதீட்டிக் கொண்டது போன்ற கண்ணழகியே! இகழும் குயிலையும், அவரையும் வெறுத்துப் பேசாதே! பிணிப்புச் சேர்ந்துவிட்ட உன் அழகிய கூந்தல் புனைந்து அழகுடன் விளங்குமாறு அவர் விரைவிலேயே நின்னிடத்தே வருவார். இன்ன நாளிலே வருவேன்’ என்று வரையறை சொல்லிப் போனாரே, அவர் சொல்லிய சொல் பொய்யாகாதவாறு உறுதியாக மீண்டு வருவார். மாலை சூடிய அகன்ற மார்பினராக உன் அன்பர் வந்து, உனக்குத் துணையும் செய்வார். காற்றுப்போல விரைந்து வரும் கடுந்தேரைச் செலுத்தி, அவரே அதோ வந்துவிட்டார். அவரைக் காண்பாயாக! சொற்பொருள்: 1. வீறுசால் - பெருமை பொருந்திய ஞாலம் - உலகம். 2. நந்தி - நிறைந்து. 3 மணி - பளிங்கு புரை - ஒக்கும். வயங்கல் - கண்ணாடி துப்பு பவளம். 4. பிணி விடும் - மலரும். 5. துணி கயம் - தெளிந்த குளம். துதைபு - நெருங்கி, 6. வேய - சூட9. போது - பேரரும்பு.15. நந்தின - மலர்களால் நிறைந்தன. நைந்து வருந்தி. 17. உகுவது போல் - அழுவதுபோல். 24. மிஞ்று - தேன்வண்டின் இனம். 25. ஆலும் கூவும். அரோ: அசை. 27. புரிந்து - மனம் வேறுபட்டு. 28. நீல் - நீலமலர். நெறிகூந்தல் - பின்னிய கூந்தல். பிணிவிட - சிக்குப்போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/83&oldid=822079" இலிருந்து மீள்விக்கப்பட்டது