பக்கம்:பாலைக்கலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் பாலைக் கலி 77 ஒன்று தந்து நன்றியுடன் மீண்டும் உதவும் பெருந்தன்மை யுடையவர் போல், இருந்தது அக் கவின் காட்சி. காஞ்சிப் பூவின் தாதிலே அளைந்து வந்து, மகிழ்வோடு கருங் குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்திலும் பிரிந்திருக்கலாகுமா? என அஞ்சாது, அப்படி இருப்பவரின் தீய செயலை யானும் மறைக்கத் தான் முயல்வேன். ஆனால், இயலவில்லையே! பொய்ச் சாட்சி கூறியவன் வந்து கீழே இருந்ததனால், உடன் தான் பட்டுப்போன மரம் போலிருக்கிறதே என் நிலை காமத்தீயினைப் பொத்திப் பொத்தி மறைத்தாலும், என் நெஞ்சம் சுட்டு வருத்துகின்றதே! அதனால், என் அழகும் வாடுகிறதே! யான், எவ்வாறு என் நிலையை மறைப்பேன்? என்ன செய்வேன்? ஏதும் அறியேனடி? பூவின் பாரந் தாங்காமல் தளர்ந்திருக்கும் மரக்கொம்பின் மேல், வண்டின் திரளும் சென்று தங்கி வருத்துகின்றதே! இந்நிலையிலே, அவர் தீமை செய்யவும் நிறை தளராது என்னால் மறைக்க முடியுமோ? முறை தளர்ந்த மன்னவனின் ஆட்சியின் கீழ்க் குடிமக்கள் கலங்குவது போல, அவர் செய்யும் முறையற்ற செயலால் பொறுமையிழந்து நீர் சொரியும் கண்ணின ளாயினேன்? என் நிலையை மறைக்க என்னதான் செய்வேனோ தெரியவில்லையே? முறுக்கவிழ்ந்த மலர்களையுடைய மரக்கொம்பிலே சுரும்பினம் யாழ்போல இசைபாடுகின்றனவே! அவர் செய்த தீமையைக் கொள்கை தவறாமல் யான்தான் எவ்வாறு மறைக்க முடியும்? உறவினரையெல்லாம் கெடுத்து வாழ்பவனின் கொள்ளி முடிந்த சொத்துப்போலப் பொலிவு கெட்டு, வளைகழன்று ஒடும் நிலையிலே என் தோள்களும் மெலிந்தனவே! இனி, என் நிலைமையை மறைக்க, என்ன தான் நானும் செய்வேனடி? இதனைக் கேட்ட தோழி சொல்கிறாள்: ஏ.டீ.! உன் உள்ளத்து நோயையெல்லாம் இவ்வாறு சொல்லிச் சொல்லி ஏனடி வருந்துகின்றாய்? நான் வருவாரென்று எண்ணியிருந்த நாளின் எல்லை தவறாது, உன் கண் கலங்கும் வருத்தத்தைத் தாமே தம் கையாலேயே நீக்குவாரைப்போல, அதோ, அவரே குதிரையேறி விரைந்து வந்து கொண்டிருக்கின்றார்! அதைப் பாரடீ" . சொற்பொருள்: மன் உயிர் - உயிரினங்கள். ஏமுற வாழுமாறு. 4. ஆற்றி செய்து, இமிர்ந்து ஒலித்து. 7. இறுத்தந்த - வந்து தங்கிய, 8. தாது.ஆடி மகரந்தத் தூள்களிற் படிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/85&oldid=822082" இலிருந்து மீள்விக்கப்பட்டது