பக்கம்:பாலைக்கலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கலித்தொகை மூலமும் உரையும் "சுடரும் இழையினை உடையாளே! என்னென்னவோ பலவற்றையும் நினைந்து வருந்தி நாம் அவரைப் பிரிந்தபோது, 'வருவேம்’ என்று அவர் சொன்னதை நீயும் அறிவாயே! உலகெங்கும் புகழ்ந்து பேசப்படும் நெடுமாடக் கூடலான இம் மதுரையிலே உள்ளவர், புலவர் நாவிலே புதிதுபுதிதாகப் பிறக்கும் பாடல்களைக் கேட்டு மகிழும், இளவேனிற்காலம் அல்லவோ இது? ஏனடி அவர் மட்டும் இன்னமும் வரவில்லை? தோழியின் பதில் 'நின் காமநோயை நினைக்க நினைக்க நெஞ்சம் உடைகின்றதே! பறந்து செல்லும் பறவையிலும் வேகமாகச் செல்லக்கூடிய தேரினை உடையவன் நம் பாண்டியன். அவன் சொன்ன சொல் தவறாத வாய்மையாளனும் ஆவான். அவனைப் போலப் பேச்சுத் தவறாது குறித்த நாளிலே அவரும் வருவார். அதோ! உன்னால் இகழப்பட்ட உன் காதலர், உனக்கு இனி உயிர்ப்புத் தருவதற்கு வந்துவிட்டார்! இனி, நான் என் வீட்டிற்குச் செல்கிறேனடி! சொற்பொருள்: 3. ஈன - துளிர்க்க. 5. நண்ணி - அடுத்து. 6. அயிர் - நுண்மணல். வரித்து - அழகு செய்து அறல்வார அருவி ஒட7.நனி-மிகவும். எள்ளும்-நகைக்கும்.இனைபு-வருந்தி. உகும் - கெட்டழியும், 9. உள்ளார் - நினையார். துனி - வெறுப்பு. 9. இமிர்ந்து ஆரவாரித்து. ஆனா - இன்பம் குறையாத, 15. வினைவலனாக-வினைக்கண் வெற்றி பெறுக 18. புலன் நாவில் - புலவர்களுடைய நாவில், 18 நாடு - எண்ணி எண்ணி வருந்தும். 22. உயவுநோய் - வருத்தம் மிக்க காம நோய். 23 இயைதந்தார் . வந்து சேர்ந்து கூடினார். புள்- பறவை. புள்இயல்- பறவைபோல் விரைந்து பாயும் இயல்பு. 35. நெஞ்சிலே தீ எரிகிறதடி? (வருவதாகக் குறித்த காலத்தில் கணவன் வராததறிந்து துடிக்கிறாள் ஒரு தலைவி. அவளைத் தேற்ற எண்ணிய தோழிக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. உங்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து என் நெஞ்சுதான் வேகிறது என்று வெம்புகிறாள்.) 'கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர, - வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப, தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர, இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென, 5 கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/88&oldid=822085" இலிருந்து மீள்விக்கப்பட்டது