பக்கம்:பாலைக்கலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чоўцыйӑ байs& & பாலைக் கலி 81 மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப, இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற, குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும், வந்தன்று; 10 வாரார், தோழி! நம் காதலோரே. பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்; சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள். நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய பனி அறல் வாரும், என் கண். 15 மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு முலையிடைக் கனலும், என் நெஞ்சு. காதலின் பிரிந்தார் கொல்லோ? வறிது, ஓர் தூதொடு மறந்தார் கொல்லோ? நோதக, காதலர் காதலும் காண்பாம் கொல்லோ? 20 துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ? யாவது? - "நீள் இடைப் படுதலும் ஒல்லும், யாழ நின், வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி! நாள் அணி சிதைத்தலும் உண்டு" என நய வந்து, கேள்வி அந்தணர் கடவும் 25 வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே." வெண்கடப்ப மரங்களின் மேலிருந்து மயில்கள் அழகுடன் ஆடுகின்றன. அந்தக் காட்சி, கலப்பைப் படையையுடைய பலராமன், தோளிலே பசுந்துழாய் மாலை அணிந்திருப்பதைப் போல விளங்குகிறது. யாழிசை ஒலிப்பதுபோல வண்டும் சுரும்பும் அங்கே ஆரவாரம் செய்கின்றன. தொடி யேந்திவரும் விறலியின் இசைபோலத் தும்பிகள். சூழ்ந்து ஒலிக்கின்றன. எங்கும் இசை எழுந்ததுபோல எப்புறத்தும் இம்மென்னும் ஒலி எழுகின்றது. குளங்கள் அணிசெய்யும் சோலைகளிலே, மணமலர்களின் தேனை உண்ண, மலர்கள் வண்டினங்களை 'வருக வருக என்று கூப்பிடுவதுபோல, மரக் கிளைகள் அசைந்தாடுகின்றன. ஒருபால் கருங்குயில் கூவுகிறது. பெரிய நீர்த்துறைகள் எல்லாம் புது அழகுடன் விளங்குகின்றன. இளவேனிற் காலத்தே, காமன் விழாவினை நடைபெறுவிக்க வேண்டிய சிறப்பான பருவமும் வந்து விட்டது. தோழி! நம் காதலுக்கு உரியவர் மட்டும், தாம் சொன்னபடி இன்னமும்வாரார் போலும்? என் நெற்றி படிப்படியாகப் பசலை பாய்ந்ததும் இல்லை; முழுவதுமே பசந்துவிட்டது. மெலிந்து மெலிந்து என் தோள்களும் இப்பொழுது முழுவதுமாகத் தளர்ந்து விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/89&oldid=822086" இலிருந்து மீள்விக்கப்பட்டது