பக்கம்:பாலைக்கலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலித்தொகை மூலமும் உரையும் இக்காலம் குளிர்ந்த சாரல் பெய்யும் காலமாயிற்றே என நினைந்து, என் கண்கள் வெம்மையுடைய கண்ணிரால் நிறைந்து ஒழுகிக் கொண்டிருக்கின்றன. மலையிடை வழியே போனவர் வரவேண்டும் என்று விரும்பி, காமநோயோடு, என் முலைகளுக்கு இடையிலிருந்து வெம்மையால் எரிந்து கொண்டிருக்கிறது, என் நெஞ்சு, நம் மீதுள்ள காதலிலிருந்துதான் அவர் நீங்கிவிட்டாரோ? இல்லை, ஒரு தூது அனுப்பக்கூட அவர் மறந்துவிட்டனர் போலும்? நம் காதலர் திரும்பவும் வந்து நம்மோடு செய்யும் காதலையும் காண்போமா? அல்லது நொந்துநொந்து அதற்குமுன் இறந்துவிடுவோமா? பிரிந்து போனவர் அங்கங்கேதான் தங்கிவிடுவாரோ? இவ்வாறெல்லாம் பலவும் கூறிக்கூறிப் புலம்புகிறாள் தலைவி. தோழி! நெடுநாள் பிரிந்திருத்தல் அவருக்கும் பொருந்தும். கத்தரிக்கையால் ஒழுங்காகக் கத்தரித்து விடப்பட்ட அழகான நின் கூந்தல், நாள்தோறும் அணிபெறாது, நின் அழகைச் சிதைத்துக் கொண்டிருப்பது உனக்கும் பொருந்தும். ஆனால், உங்களிருவர் நிலையையும் நினைந்து என் உள்ளந்தான் வேதனைப்படுகின்றது. யாகம் செய்பவரின் வேள்வித் தீயிலிருந்து கிளம்புகின்ற செந்தீயைப் போல, என் உள்ளம்தான் மூண்டு எழுகின்ற வெப்பத்தால் வேகின்றது. இவ்வாறு, தோழி இருவர் நிலையையும் கண்டு தன் மனம் வெதும்பிக் கூறுகின்றாள். சொற்பொருள்: 1. கொடுமிடல் நாஞ்சில் - கொடிய வலிய கலப்பை, நாஞ்சிலான் - பலதேவன்; கலப்பையைப் படையாகக் கொண்டவன். 3 வடிநரம்பு - முறுக்கற வடித்த நரம்பு 9. குழவி வேனில் - இளவேனில், 12 பாஅய் - பரவி 13. சாஅய் - வளர்ந்து. 17. கனலும் வேகும்; காந்தா நிற்கும். 25. கேள்வி- நூலைக் கற்றுப் பெற்ற கேள்விச் செல்வம். கடவும் - செய்யும். பலைக்கலிமுற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/90&oldid=822088" இலிருந்து மீள்விக்கப்பட்டது