பக்கம்:பாலைக்கலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 o கலித்தொகை மூலமும் உரையும் பிணைந்தவாய் நிகழ்வன ஆகும். இவற்றைக் குறிஞ்சித் திணை எனவும், பாலைத்திணை எனவும், முல்லைத்திணை எனவும், மருதத்திணை எனவும், நெய்தல் திணை எனவும் ஐவகை ஒழுக்கக் கூறுகளாக வகுத்துக் கொண்டு, அவற்றின் பகுதிகளாகப் பலப்பல துறைகளையும் வகுத்துக் கொண்டு, செய்யுள் செய்வது பண்டைத் தமிழ் ஆன்றோரின் மரபாகும். இத் திணைப் பகுதிகள் எல்லாம், குறிப்பிட்ட மன நெகிழ்ச்சி காரணமாகத் தோன்றி எழுகின்ற உள்ளத்து உணர்வுகளின் எழுச்சிகளை நயமுறக் காட்டி, அக்கால மக்களின் ஒழுகலாற்றின் பண்பினையும் செம்மையினையும் விளக்குவனவாகும். இவைதாம், ஒப்புயர்வற்ற சொல்லோவியங் களாகவும் அமைந்து, தமிழறிந்தாரை என்றும் களிப்பூட்டுவன வாகவும் இலங்குகின்றன. இவ் வொழுக்கம் முதல் எனவும், கரு எனவும், உரி எனவும் மூன்றாகக் கூறப்படும் பொருள்களின் சார்பாக நிகழும் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். இவற்றுள், முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும் என்னும் இவற்றினை யொட்டி அமையும் ஒழுக்கங்களாம். 'நிலம் என்பது, குறிஞ்சியும், பாலையும் முலலையும், மருதமும், நெய்தலும் என ஐந்தாம். பொழுது என்பது, அந்த ஐவகை நிலத்தையும் சார்ந்து நிற்போர்க்குக் காமவுணர்வினைக் கிளர்ந்து எழச்செய்யும் பெரும்பொழுதும், சிறுபொழுதும் எனும் இரண்டும் ஆகும். அவை: திணை பெரும்பொழுது சிறுபொழுது 1. குறிஞ்சி கூதிரும், முன்பனியும் யாமம் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை) 2. பாலை வேனில், பின்பணி நண்பகல் (ஆணி, ஆடி, மாசி, பங்குனி) 3. முல்லை கார் (ஆவணி, புரட்டாசி) ԼDIT6Ծ)6Ն) 4. மருதம் ஆறுபருவங்கள் (12 மாதங்களும்) விடியல் 5. நெய்தல் ஆறுபருவங்கள் (12 மாதங்களும்) எற்படுகாலம் இவை, அவ்வந் நிலங்களுக்குச் சிறப்பாக பொருந்துவன என்று காணப்பெற்றன. இவை, சில சமயம், சிலர் பால் மயங்கி நின்றும் உணர்வெழச் செய்தலும் நிகழலாம். அவை ஒழுக்கத்தின்கண் மயக்கம் என்றே கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/92&oldid=822090" இலிருந்து மீள்விக்கப்பட்டது