பக்கம்:பாலைக்கலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 86 கலித்தொகை மூலமும் உரையும் மனமும் இத்திணையின் சிறப்பான அம்சங்கள். இதனால், காத்திருத்தல் இயல்பாக, இருத்தலையும் இருத்தல் நிமித்தத்தையும் இதற்கு உரிமையாக்கியுள்ளனர். மருதம், வளமான செந்நெல் மலிந்த நிலப்பகுதி. இங்கே உழுவித்து உண்ணும் பெருஞ்செல்வர் வாழ்வதும் இயல்பு. இவர்கள், தம் வளமையால், காமத்தில் எளியராகிப் பரத்தமை கோடலும் நிகழுவதாம். இதனால், தலைவியர் ஊடலும், அதன் நிமித்தமாக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலையும் ஊடல் நிமித்தத்தையும் மருதத்திற்கு உரிமையாக்கி யுள்ளனர். நெய்தல், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும். மீன் வளம் நாடிக் கடலிலே திமிலேறிச் செல்வதே பெரும்பாலும் ஆடவரது தொழிலாதலின், அவர் குறித்த பொழுதில் வராதபோது இரங்கலும், இரங்கல் நிமித்தமாக எழும் பேச்சும், இந்நிலத்தில் நிகழ்வதும் இயல்பாயின. இனி, கருப்பொருள்கள் என்று கூறப்பெறுவன, அவ்வத் திணைகட்கு உரியனவாக, அவ்வற்றின்கண் உள்ளனவாக விளங்கும் தெய்வம் முதலான பதினான்கும் ஆகும். அவை: 1. குறிஞ்சியின் கருப்பொருள்கள் 1. தெய்வம் முருகக் கடவுள் (சேயோன்) 2. உயர்ந்தோர் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, (வெற்பன், வேம்பன், பொருப்பன், கொடிச்சி - தொல், உரை). 3. தாழ்ந்தோர் குறவர், கானவர், குறத்தியர் (கானவர், வேட்டுவர், இறவுளர், குன்றுவர், வேட்டுவித்தியர், குறத்தியர், குன்றுவித்தியர் முதலியோர் - தொல். உரை). o 4. புள், கிளி, மயில் 5. விலங்கு புலி, கரடி, யானை, சிங்கம் (சிங்கத்துக்குப் பதில் கரடி - தொல். உரை). 6. ஊர் சிறுகுடி (குறிஞ்சியும் - தொல். உரை கூறும்). 7. நீர் அருவிநீர், சுனைநீர். வேங்கை, குறிஞ்சி, காந்தள் (சுனைக் وليا .8 குவளையும் தொல். உரை கூறும்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/94&oldid=822092" இலிருந்து மீள்விக்கப்பட்டது