உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

46

72

நெஞ்சு இனிக்குமா?

"எந்தமிழர் அரசேற்றார்; எடுத்தவினை முடித்திட்டார்; இருளைச் சீய்த்தார்; செந்தமிழை முடிவைத்தார்; செய்தொழிலால் தமிழ் நிலத்தைச் சிறக்கச் செய்தார்; தந்தபயன் அளவில்லை; தம்புகழ்க்கும் வரையில்லை; தகவாம்” என்றே எந்தநொடிச் செவிமடுப்போம்; இளைத்தவுடல் பூரிப்போம்; இனிப்போம் நெஞ்சே!

- ?968

அரசியல் குழப்பம்!

மொழித்தெளிவும் பெறமாட்டீர்! செய்தித்தாள் சிறுநூல்கள் எல்லா வற்றும் , - - பழித்தவுரை வரைகின்றீர்! பண்பிழந்தே எழுதுகின்றீர்! பணத்தைச் சேர்த்தீர்!

வழித்தெளிவும் கொளமாட்டீர்! அரசியலை

வளர்ப்பதுவாய்க் குழப்பு கின்றீர்!.

விழித்தெழவும் விரும்புகிலிர் என்னபயன் விளைத்திடுவீர் தமிழ்நாட் டிற்கே!

- #966