உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தூக்கிய கழுத்துப் பட்டை! துவளாத சட்டை காலைப் போக்கிய இறுகல் காற்பை ! இடுப்பெனும் துடைப்பக் குச்சி! (தாக்கிய சொற்கள் அல்ல; தாங்கொணாத் துயரத் தாலேஊக்கிடும் நோக்கத் தோடேஉலராத கண்ணிர்ச் சொற்கள்!)

அடடா! எம் இளைஞர்க் கந்நாள் ஆற்றலும் துணிவும் மீண்டால்...! இடமென்ன, காலமென்ன, எந்தமிழ் இனத்தை மீட்க? தடமார்பு! குன்றத் தோள்கள்! தழல்விழி அரிமாச் சீற்றம் முடமாகும் ஆரி யங்கள்! முண்டமாய்ச் சரிந்து போகும்!

நேற்றில்லை; என்றோ சாய்ந்த வரலாறு நிமிர்ந்து நிற்கும்! கூற்றில்லை; மந்திரச் சொல்! குலைவுற்ற தமிழர் நெஞ்சில் காற்றில்லை; கணப்பு மில்லை! ஆதலால் காய்ப்பு மில்லை! ஏற்றதோர் பொழுது நேரும்; இந்தியா மூளி யாகும்!

அழலுண்டு தமிழர் நெஞ்சில் அஃதோர்நாள் கனத்த லுண்டு: எழலுண்டு, தமிழர் கூட்டம்: இருபது நூற்றாண் டாகநிழலுண்டு; பழம்பால் உண்டு; நெய்யுண்ட 'மிலேச்சர் கூட்டம் விழலுண்டு! தமிழர்க் கந்தாள் விடிவுண்டு; விளைவும் உண்டே!

- 1973