88
144
எனக்கென எதுவுமில்லை!
எனக்கென எதுவுமில்லை - இந்த இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர! - இவன் தனக்கொரு நினைவிலனாய் - மிகத் தாழ்வுற வாழ்வதைத் தவிர்க்கிலனே' - எனச் சினக்கவும் இயல்வதில்லை! - ஒரு சிரிப்பினில் இகழவும் முடிவதில்லை! - பிற மனக்குறை எதுவுமில்லை - தமிழ் மானத்தை மீட்கின்ற நாள்வரையில் - இங்கு எனக்கென எதுவுமில்லை - இந்த இன்ங்கெட்ட தமிழனின் நிலைதவிர!
எண்ண்வும் திறனிலனாய் - பிறர் எடுத்துரைத் திடினுமோர் உணர்விலனாய் - மிகத் திண்ணமாய் உரைத்திடினும் - ஒரு செயலுக்கு முன்வரும் துணிவிலனாய் - பல வண்ணமாய் வாழுகின்றான்! - இவ் வாட்டமே யன்றிவே றெதுவுமில்லை! - தமிழ் மண்ணிடைத் தோன்றிவிட்டேன்! - பொது, மனத்துடன் எதனையும் நினைத்துவிட்டேன்! - மற்று எனக்கென எதுவுமில்லை! - இந்த - இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!
உண்மையில் ல்ாதவன்ாய் - தான்
உண்ணவும் உடுக்கவும் பிறரிடம்போய் - மனத் திண்மையிழந்துவிட்டான் - ஒன்று --- - - - தேறவும் செய்யவும் வாய்ப்பிலனாய் - இழி பெண்மையின் நடிப்பினனாய் - ஒரு பேடியைப் போல்இவன் வாழுகின்றான் - என எண்ணியே வருந்துகின்றேன்! - வேறு எதனையும் பெரிதென நினைப்பதில்லை! - இங்கு எனக்கென எதுவுமில்லை - இந்த இனங்கெட்ட தமிழனின் நிலைதவிர!