உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

166

வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக!

சாதிப் பேய் அழிந்துவரும் இந்நாளில் பார்த்த சாரதியார் தினமணிசெய் கதிரிதழை ஒவ்வோர் சாதிக்கும் சிறப்பிதழாய்க் கொணர்கின்றார்; இங்கே சரிந்துவரும் உணர்வுகளை நிலைநிறுத்து கின்றார்! மோதிக்கொண் டழியுட்டும் தமிழரினம்’ என்றே முழுசூழ்ச்சிப் பார்ப்பனர்க்குக் கரவான எண்ணம்!

.ஏ திக்கெட் டும்ஓடி அடிமையுறுந் தமிழா! -

ஏமாற்றுக் கொள்கையினை நீயுணர்தல் வேண்டும்!

படிக்கின்ற இளைஞரிடை, பெண்களிடைச் சாதி பரவிவரும் இழிநிலையைக் - கேடுகெட்ட போக்கை -

இடிக்கின்ற வகையினிலே தமிழுணர்வைப் பாய்ச்சி

எந்தமிழர் பேரினத்தை ஓரினமாய்ச் செய்க துடிக்கின்ற மாணவர்க்குப் பொதுமைநலம் சொல்க! துவளாத நல்லிளைஞர் மதர்மதர்க்கும் நெஞ்சில் வெடிக்கின்ற புரட்சிக்கு வித்திடுக! அக்கால் வீணர்களின் முயற்சியெலாம் தூள்தூளாய்ப் போகும்!

- 1980