பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல்

87


திருமகள் மனமகிழ்தல் செல்வம் நல்வழியிற் செலவிடப்படுதல்பற்றி. வதிதல் நிலையாகத் தங்குதல். நல்விருந்தினர் அறிவும் ஒழுக்கமும் தன் மானமும் உள்ளோர்.

85.வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

(இ-ரை.) விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்பு விருந்தினரை உண்பித்துவிட்டுப் பின்பு மீந்ததைத் தானுண்ணும் வேளாளனது நிலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - விதை தெளித்தலும் வேண்டுமோ? வேண்டுவதில்லை.

தானே விளையும் என்பது குறிப்பெச்சம். இஃது இக்காலத்திற்கு இன்மைநவிற்சியாகத் தோன்றலாம். வளமிக்க பண்டைக் காலத்தில், அறுவடை நாளில் வயலிற் சிந்திய மணிகள் களந்தூர்க்கப்படாமலே கிடந்து, அடுத்துப் பெய்த மழையால் முளைத்து வளர்ந்து விளைந்திருக்கலாம். இனி, இக்காலத்தும், வித்தையும் சமைத்து விருந்தினர்க்குப் படைத்த வேளாளனது நிலத்தில், அவனுக்குத் தெரியாமல் இரவோடிரவாக வேறோர் அறவாணனான செல்வன் தன் சொந்த வித்தை விதைக்கலாம்.

இனி, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் - விருந்தினரை யுண்பித்துப் பின் மீந்ததை யுண்ணும் இயல்புள்ள வேளாளன்; புலம் வித்து இடலும் வேண்டுமோ - விருந்தோம்பல் முட்டுப்பட்ட விடத்துத் தன் நிலத்தில் விதைக்கு வைத்திருந்ததை விதைக்கவும் விரும்புவானோ? விரும்பான் என்று, வேறும் ஒரு பொருள் கொள்வர். இதற்கு இளையான்குடி மாற நாயனார் வரலாறு ஓர் எடுத்துக்காட்டாம்.

'கொல்' அசைநிலை, மிச்சில் அடுகலத்தில் அல்லது பெட்டியில் மிஞ்சுவது; தூய்மையா யிருப்பது. எச்சில் உண்கலத்தில் அல்லது இலையில் எஞ்சுவது; எச்சிலோடு கூடியது. இவ் வேறுபாடறிக.

86.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.

(இ-ரை.) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் - தன்னிடம் முந்திவந்த விருந்தினரைப் பேணிவிட்டுப் பின்பு பிந்திவரும் விருந்தினரையும் எதிர்பார்த்து அவரோடு தானுண்ணக் காத்திருப்பான் வானத்தவர்க்கு