பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

திருக்குறள்

தமிழ் மரபுரை


350. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(இ-ரை.) பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருள் களையும் பற்றிநின்றே இயல்பாகப் பற்றில்லாதவனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க; பற்றுவிடற்கு - விடாது தொடர்ந்து வரும் ஆசைப் பிணிப்பு முற்றும் நீங்குதற்கு; அப் பற்றைப் பற்றுக - அவ் விறை வன் பத்தியையே ஊழ்க ஒன்றுகைகளால் (தியான சமாதிகளால்) இறுகக்கடைப்பிடிக்க.

சார்ந்ததன் வண்ணமாதல் ஆதன் (ஆன்மா) இயல்பாதலால், பற்றற் றானைப் பற்றினவன் தானும் பற்றற்றானவன் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

அதி. 36 - மெய்யுணர்தல்

அதாவது கடவுள், உயிர், தளை ஆகிய மூன்றன் இயல்புகளையும், உயிருக்குக் கடவுளொடும் உலகத்தொடுமுள்ள தொடர்பு வகைகளையும், ஐம்பூதக் கூறுபாடுகளையும், உடலின் அமைப்பையும், பிறப்பும் வீடும் ஆகிய நிலைமைகளையும், இறைவன் திருவருளாலும் ஓகத்தாலும் உண் மையாக உள்ளபடி யுணர்தல். இது, சமயக் கொண்முடிபு (சித்தாந்தம்) கண்டவர் தாமாக வுணர்தலும், பிறர் அவர் உணர்ந்ததை யுணர்தலும் என இருதிறப்படும்.

ஆராய்ந்து கண்ட ஒவ்வோர் உண்மைப் பொருளும் மெய்ப்பொருள் (தத்துவம்) எனப்படும். இறைவ னுண்மையை நம்பாத சாங்கியமதம், ஆதமெய்ப்பொருள் (ஆன்ம தத்துவம்) இருபத்து நாலொடு ஆதனை (புருடனைச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தைந்தெனக் கூறும். திருமாலியம் (வைணவம்) அவற்றொடு பரவாசுதேவன் என்னும் இறைவனைச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தாறெனக் கூறும். ஆரியச்சார்பான இற்றைச் சிவனியம், ஆதமெய்ப்பொருளொடு சிவமெய்ப்பொரு ளென்று ஐந்தும். அறிவுமெய்ப்பொருள் (வித்தியா தத்துவம்) என்று ஏழும் சேர்த்து மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தாறெனக் கொள்ளும். உலகி லுள்ள நம்பு (ஆத்திக) மதங்களெல்லாவற்றிற்கும் பொதுவான மெய்ப் பொருள்கள், பூத மெய்ப்பொருள்கள் இருபதுடன் உயிர் மனம் மதி இறைவன்