உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திருக்குறள்

தமிழ் மரபுரை


பிறந்தாரென்று கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதியென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும் கூறுவன கொள்ளத்தகாத கட்டுக்கதைகளாகும்.

திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக்கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதற் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்திக்கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமையத்தில் ஓர் இழி குலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.

முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறுதெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பொருள் குன்றியமையால் அதை நிறைவு படுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. இதை ஆதிசங்கராச்சாரியார் என்பது போலக் கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.

ஆதிபகவன் என்பது, ஆதியாகிய பகவன் என்றாவது ஆதிப் பகவன் என்றாவது விரியும்.

யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஓர் அறிவில்லாத சண்டாளப் பெண் என்றும் பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக் கொண்டுபோய் உத்தரதேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தா னென்றும், ஞானாமிர்த வுரை கூறும், கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதி யென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க. அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டா ளென்று குறிப்பினும், பலநாட் பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிர விற் கண்டு அடையாளந் தெரியாமல் அவளைத் தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ் வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க.

உடன்பிறந்தார்: இவருக்கு உடன்பிறந்தார் இருந்ததாகத் தெரிய வில்லை.

யாளிதத்தனின் மனைவி பிராமணத்தியாயிருந்து பிள்ளைகளைப் பெற்றாளென்று ஞானாமிர்த வுரையும், ஆதியென்னும் புலைச்சி மறுநாட்-