பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

திருக்குறள்

தமிழ் மரபுரை



அதி. 6-வாழ்க்கைத் துணைநலம்

அதாவது, இல்லறத்தானின் வாழ்க்கைத் துணையாகிய கற்புடை மனைவியின் நலங்களை எடுத்துக் கூறுதல்.

51.

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

(இ-ரை.) மனைத்தக்க மாண்பு உடையள் ஆகி - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய்; தற்கொண்டான் வளத்தக்காள் - தன்னை மணந்துகொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள்; வாழ்க்கைத் துணை - அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

நற்குணங்களாவன: கணவனையும் பிறக்கும் மக்களையும் பேணுதலும் அன்பாக விருந்தோம்புதலும் துறவியரைப் போற்றுதலும் இரப்போர்க்கு ஈதலும் முதலியன. நற்செய்கைகளாவன: அறுசுவை யுண்டிகளைச் சுவை யாகச் சமைத்தலும் வீட்டையும் பொருள்களையும் பாதுகாத்துக் கொள்ளு தலும் அக்கம்பக்கத்தாரொடு நட்பாயிருத்தலும் கணவன் உத்தரவின்றி வீட்டைவிட்டு வெளியேறாமையும் முதலியன.

52.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.

(இ-ரை.) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல் - அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடைய தாகாது.

'இல்' என்றது பயனின்மையை. “ஆவதும் பெண்ணாலே. அழிவதும் பெண்ணாலே” என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத்தக்கது.

53.

இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை.

(இ-ரை) இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவளுக்கு இல்-