92
திருக்குறள்
தமிழ் மரபுரை
பட்டது. 'நிலை' என்பது "நீக்கமும் நிலையும்" (திருவாச. 3 : 9) என்பதிற்போல உறுதியென்னும் பொருள்கொண்டது.
790. இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்னு நட்பு.
(இ-ரை.) இவர் எமக்கு இனையர் - இவர் எமக்கு இத்துணை யன்பினர்; யாம் இன்னம் - யாம் இவர்க்கு இத்தன்மையேம்; என்று புனையினும் - என்று சொல்லி ஒருவரையொருவர் பாராட்டினும்; நட்புப் புல்லென்னும் - நட்புத் தன் பொலிவிழக்கும்.
இருவர் வேற்றுமையின்றிக் கலந்து நட்டபின், ஒருவரை யொருவர் பாராட்டும்போது யாம் இவர் என்று வேறுபடச் சுட்டிக் கூறினும், அது வேற்றுமை காட்டுதலால், நட்புத் தன் அழகிழக்கும் என்றார். இவ் வுயர்ந்த நிலை கோப்பெருஞ்சோழ பிசிராந்தையார் நட்பிற்கே ஏற்குமென்பது,
"தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னும்"
"பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே"
என்னும் கோப்பெருஞ்சோழன் கூற்றுகளால் அறியப்படும்.
இனி, "நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்" என்று ஒளவையார் கூறியதற்கேற்ப, இரு நண்பர் உடனிருந்து ஒருவரையொருவர் பிறரிடம் புகழ்ந்து கூறினும், அவர் நட்பின் சிறப்புக் குன்றும் எனினுமாம். உயரிய நட்பிற்கு ஒருவரை யொருவர் உடனிருந்து புனைந்துரைத்தல் ஒவ்வாதென்பது கருத்து. இவர்க்கு என்பது வருவிக்கப்பட்டது.
அதி.80 - நட்பாரா தல்
அதாவது, நட்பிற்குத் தகுந்தவரை ஆரா-ந்தறிதல். மணவுறவு போன்று நட்புறவும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதாகையாலும், மெ-ந்நட்பால் ஆக்கமும் தீநட்பால் அழிவும் நேர்வதாலும், மலர்ந்த முகத்தையும் இனிய சொல்லையுமே சான்றாகக் கொண்டு எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆரா-ந்து பார்த்து உண்மையான அன்பரையே நண்பராகக் கொள்ளவேண்டுமென்று கூறியவாறாம். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.