உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

திருக்குறள்

தமிழ் மரபுரை





“உடம்பா ரழியி னுயிரா ரழிவர்

திடம்பட மெ-ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கு முபாய மறிந்தே உடம்பை வளர்த்தே னுயிர்வளர்த் தேனே."

“உடம்பினை முன்ன மிழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.”

(திருமந்.724)

(திருமந்.725)

உடம்பானது வாழ்க்கை நெறியிற் செலுத்தும் சகடம் போன்றிருத்த லால், உடம்போடுகூடி வாழ்தலை உ-த்தல் என்றார். உடம்பைச் செலுத்துவது அல்லது இயக்குவது என்னும் பொருட்கரணியம்பற்றியே உயிர் என்ற சொல்லும் எழுந்தது. உ- உயிர். 'உண்க' என்னும் பாடவேறுபாடு பொருந்துவதன்று. பிறரெல்லாம் 'உண்க' என்றே பாடமோதினர். அப் பாடத்திற்கு இயற்சீர் வெண்டளை தட்டுதலின் அது பாடமன்மை யறிக. தமிழை ஆரிய அடிப்படையிற் கற்றவர், ஆ-தத்தை வடமொழி விசர்க்கம் போற் கொண்டு அது சிலவிடத்து ஒரு மாத்திரை கொண்ட உயிர்மெ- யாகவும் ஒலிக்கும் என்பர். அவர் அறியார்.

“மெ-யின் அளபே அரையென மொழிப”

“அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே”

(11)

(12)

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. "குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆ-தம் என்ற முப்பாற் புள்ளியும்" (2) ஏனை மூன்றாம். ஆ-தம் ஒரோவழி கால்மாத்திரையாகக் குறுகுமன்றி ஒருபோதும் ஒருமாத்திரையாக நீளாது.

66

'உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா

ஆ-தம் அஃகாக் காலை யான

25

(40)

என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. 'சொல்வான்' என்னும் சொல் 191ஆம் குறளிற் சொல்லுவான் என்றும், 'சொல்க' என்னும் சொல் 197ஆம் குறளிற் சொல்லுக என்றும், தளைக்கேற்ப விரிந்தவடிவில் நிற்றல் போன்றே, 'உண்க` என்னும் சொல்லும் உண்ணுக என விரிந்து நின்றதென்க.