பொருட்பால் - உறுப்பியல் (குடி) - பெருமை
193
கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது; பிறரை இன்புறுத்துவது, பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில் வேறு பாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.
"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப் பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா' வென்றும் கூறினார்" என்பது பரிமேலழகரின் ஆரியச் சார்பு சிறப்புரை.
973. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.
(இ-ரை.) மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் -பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட குமுகாயப் படிமுறை யொழுங்கில், பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சியிலிருந்தும், ஒழுக்கங் கெட்டவராயின் உயர்ந்தோரல்லர்; கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார் - உண்மையாகத் தாழ்ந்தவரல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர், பிராமணரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவ ராகார்.
66
"மறுப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’
என்று முன்பும்,
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செ-தொழில் வேற்றுமை யான்
(குறள்.134)
என்று இங்கும் ஆசிரியர் கூறியிருப்பதால், "செயற்கரிய செ-கலாது சிறிய ராயினார், உயர்ந்த வமளி முதலியவற்றின் மிசையிருந்தா ராயினும், பெரிய ராகார்; அவை செ-து பெரியராயினார் தாழ்ந்த வறுநிலத்தி லிருந்தாராயினும் சிறியராகார்.
"மேலிருத்தல் கீழிருத்தல்களாற் செல்வ நல்குரவுகளும் மேல்கீழ்களாற் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது. இதிலுள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. இவ் விருகுறளாலும் பிறப்பாற் சிறப்பில்லை யென்பது கூறப்பட்டது.