உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

திருக்குறள்

தமிழ் மரபுரை





974.

ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.

(இ-ரை.) ஒருமை மகளிரே போல - ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக்கொள்ளும் குலமகளிர்போல; தன்னைத் தான் கொண் டொழுகின் - ஓர் ஆடவனும் ஒரே மனைவியைக், காதலித்துத் தன் கற்பைக் காத்துக்கொண்ட போதே; பெருமையும் உண்டு - பெருமைக் குணமும் அவனிடத்தில் உளதாகும்.

இதனால் கற்பென்பது இருபாற்கும் பொது வென்பதும், அது பெருமை பெறும் பெண்பாற்குப் போன்றே ஆண்பாற்கும் இன்றியமையாத தென்பதும் பெறப்பட்டன. இன்பத்தைச் சிறப்பாகக் கொண்ட அகப்பொருள் (இலக்கண) நூலார்க்கும் அறத்தைச் சிறப்பாகக் கொண்ட அறநூலார்க்கும் உள்ள கருத்து வேறுபாடும் இதனால் அறியப்படும். உம்மை எச்சவும்மை.

66

'அடங்காத் தானை வேந்த ருடங்கியைந்

தென்னொடு பொருது மென்ப வவரை

ஆரம ரலறத் தாக்கித் தேரொ

டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த

பேரம ருண்க ணிவளினும் பிரிக'

""

என்னும் பூதப்பாண்டியன் வஞ்சினமும்,

"பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்

பெருந்தோட் கணவன் மா-ந்தென வரும்பற

வள்ளித ழவிழ்ந்த தாமரை

(புறம்.71)

நள்ளிரும் பொ-கையுந் தீயுமோ ரற்றே"

(புறம்.246)

என்னும் அவன் தேவியின் பாலைநிலைக் கூற்றும், இங்குக் கவனிக்கத்தக்கன. இக் குறளாற் பெருமைக் கின்றியமையாத துணைப் பண்பு கூறப்பட்டது.

975. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி

னருமை யுடைய செயல்.

-

(இ-ரை.) பெருமை உடையவர் பெருமைக் கேதுவான பண்பை இயற்கையாக வுடையவர்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செ-து முடிப்பர்.