216
திருக்குறள்
தமிழ் மரபுரை
குற்றங்கள் அறநயன் (நீதி), முறை (நியாயம்), நடுநிலைகட்கு மாறான செயல்கள். சுற்றம் உறவினராகச் சுற்றியிருக்கும் கூட்டம். 'உலகு' வரையறுத்த ஆகுபெயர்.
1026. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
வில்லாண்மை யாக்கிக் கொளல்.
(இ-ரை.) ஒருவற்கு நல் ஆண்மை என்பது - ஒருவனுக்கு நல்ல ஆண் மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தனக்கு உண்டாக்கிக்
-
கொளல் கொள்ளுதல்.
குடியாளுந் தன்மையாவது குடியிலுள்ளவரை முன்னேற்றித் தன் வயப்படுத்துதல். போராண்மையினின்று வேறுபடுத்தற்கு 'நல்லாண்மை' யென்றார். இவ் விரு குறளாலும் குடிசெ-வாரின் தலைமை கூறப்பட்டது.
1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
மாற்றுவார் மேற்றே பொறை.
அ-ரை.) அமர் அகத்து வன்கண்ணர் போல
போர்க்களத்திற்குச்
சென்றார் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்பு ஒருசில கடுமறவர் மேலேயே இருத்தல்போல; தமர் அகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே ஒரு குடியிற் பிறந்தார் பலராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பு அதைச் செ-யவல்ல ஒருசிலர் மேலேயே உள்ளதாம்.
விளக்கம்பற்றி உவமத்திற்கும் பொருட்கும் வேண்டிய சொற்கள் வருவிக்கப்பட்டன. உம்மை இறந்தது தழுவிய எச்சம். ஏகாரம் பிரிநிலை. இக்குறளால் குடிசெ-வாரின் பொறுப்புக் கூறப்பட்டது.
1028. குடிசெ-வார்க் கில்லை பருவ மடிசெ-து
மானங் கருதக் கெடும்.
(இ-ரை.) மடிசெ-து மானம் கருதக் கெடும் - தங்குடியை முன்னேற்று வார். அத் தொண்டைக் கவனியாது காலநிலைமை நோக்கிச் சோம்பியிருந்து கொண்டு தன் மானத்தையும் பெரிதா-க் கருதுவராயின், அவர் குடிகெடும்; குடிசெ-வார்க்குப் பருவம் இல்லை - ஆதலால், குடிசெயல் தொண்டர்க்குக் காலவரம்பில்லை.