—
பொருட்பால் - உறுப்பியல் (குடி) உழவு
221
திருவள்ளுவர் காலத்தில் உயர்திணையையுங் குறித்தது வழக்குப்பற்றிய திணை வழுவமைதி. ஏகாரம் பிரிநிலை.
1034. பலகுடை நீழலுந் தங்குடை ரலகுடை நீழ லவர்.
க்கீழ்க் காண்ப
(இ-ரை.) அலகு உடை நீழலவர்
நெல்லை விளைக்கும் ஈர நெஞ்சத்
தாரான உழவர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் - பல வேற் றரசரின் குடைநிழலின் கீழுள்ள நாடுகளையும் தம் அரசன் குடைக்கீழ்க் கொண்டு வருவர்.
அரசனுக்கு ஆறிலொரு கடமை யிறுப்பதனாலும் போர்க்காலத்திற் படைமறவராகச் சென்று பொருது வெற்றி விளைத்தலாலும், 'பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்' என்றார்.
"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி'
"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வா-ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே
(1581)
""
(1582)
என்பன தொல்காப்பியம்.
"பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
22
ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே
(புறம்.35)
என்றார் வெள்ளைக்குடி நாகனார்.
"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்......
""
(சிலப். 10: 149-50)
என்றார் இளங்கோவடிகள். அலகு கதிர். அது இங்கு ஆகுபெயரா- நெல் லைக் குறித்தது. உடைய என்பது உடை எனக் குறைந்து நின்றது. 'நீழலவர்’ என்றது இரப்போர்க்கெல்லாம் ஈயும் தண்ணளிபற்றி. 'குடை நீழல்' (நாடு), ‘குடை' (ஆட்சி) என்பன ஆகுபெயர்கள். 'தங்குடை' என்றது ஒற்றுமையும் அன்பும்பற்றி, மணக்குடவரும் பரிப்பெருமாளரும் அலகுடை என்று பகுத்து, 'குடையில்லா' என்றும் 'குடையல்லாத' என்றும் முறையே பொருள் கூறுவர்.
1035. இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெ-தூண் மாலை யவர்.