உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

பொருட்பால் - உறுப்பியல் (குடி) உழவு

223

காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் அந் நிலத் திற் செ-த பயிர் கைப்பிடியெருவுந் தேவையின்றிச் செழித்து வளரும்.

பிடித்து ஒரு பிடிக்குள் அடங்கியது. உம்மை இழிவுசிறப்பு. 'புழுதி' என்றமையால் உழுதபின் கட்டியடித்தலும் பரம்படித்தலும் பெறப்படும். 1038 ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி

னீரினு நன்றதன் காப்பு.

(இ-ரை.) ஏரினும் எரு இடுதல் நன்று - பயிர் செ-யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; கட்டபின் அந் நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும் போது முற்றுங் களையெடுத்தபின்; நீரினும் அதன் காப்பு நன்று - உரிய நாள் முறைப்படி நீர் பா-ச்சுவதினும், அப் பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும்வரை தக்க காவல் செ-தல் மிக நல்லதாம்.

‘ஏர்' ஆகுபொருளது. காத்தல் பட்டிமாடு பறவைகள் திருடர் பகைவர் முதலியவற்றால் அழிவும் இழப்பும் நேராவாறு காவல் செ-தல். உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்பா-ச்சுதல், காவல் செ-தல் ஆகிய முதன்

வினைகளை முறைப்படி குறிக்கும் போதே அவற்றை ஒப்பு நோக்கிச் சிறந்தவற்றை விதந்து கூறினார். 'ஆல்' அசைநிலை.

1039. செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்

தில்லாளி னூடி விடும்.

(இ-ரை.) கிழவன் செல்லான் இருப்பின் நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டியவற்றைச் செ-யாது வீட்டிற் சோம்பியிருப்பின்; நிலம், இல்லாளின் புலந்து ஊடி விடும் - அவன் நன்செ- அல்லது புன்ச-, அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப்படையாகச் சடைத்துக் கொள்ளும்.

செல்லுதல் ஆகுவினை; அஃதாவது சென்று கவனித்துச் செ-ய வேண்டியவற்றைச் செ-தல். அவை முற்கூறியவற்றொடு பூச்சி புழு நோ கட்கு மருந்து தெளித்தல், வெள்ளத்தா லுடைந்த வரப்புத் திருத்துதல், வரப்புத் திறந்து மிகைநீரை வெளியேற்றுதல், பள்ளம் விழுந்த இடங்கட்கு மண் கொட்டுதல், காற்றாலும் மழையாலுஞ் சா-ந்த கதிர்களை நிமிர்த்திக் கட்டுதல் முதலியன. “உடையவன் போகா வேலை ஒருமுழங் கட்டை” யாதலால், நிலமுடையான் தானே செல்லவேண்டு மென்பதற்குக் 'கிழவன்' என்றார்.