பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சிவமயம் ‘க Iெ .ே ம க ம்? கதைச் சுருக்கம் அதிகாலை. பூரீரங்கம் பெரியகோவில். பரிசாரசு வாதன் மடப்பள்ளியில் தன் தொழிலைக் கவனிக்கிறான். அவன் தோழன் கிட்டு அங்கு வர, அவனுடன் காவிரி நோக்கிச் செல்கிறான். காவிரியாற்றுப் படித்துறை. அடுத்தாற்போல் தோப்பு திருவானைக்கா சிவன்கோயில் தாசி மோகனாங்கியும், அவள் தங்கை அஞ்சுகமும், வீரி, ரத்னம், பச்சை, அமுதம், கல்யாணி முதலிய இதர தாசி களும் நீராடுகிறார்கள். பெண்களின் வம்: ;ப் பேச்சு. பொறாமைக்காரி வீரி கோபத்தோடு வீடு திரும்புகிறாள். வரதன், கிட்டுவோடு தோப்பிலிருந்து பாடுகிறான். அந்த இசை அமுதத்திலே தன் உள்ளத்தைப் பரிகொடுக் கிறாள் மோகனாங்கி. வரதன் படித்துறை நோக்கி வரு கிறான். அவனைப் பார்த்தவண்ணம் படியேறிய மோகனா, கால் தவறி ஆற்றில் விழுகிறாள். வரதன் ஆற்றில் குதித்து அவளைக் கரை சேர்க்கிறான். காதல் பார்வைகள்; கனிவு மொழிகள். திருவானைக்கா வீதியுலா. சுவாமி பவனி வருகிறது. மோகனாங்கியின் பரத நாட்டியம். வரதனும், கிட்டுவும் அங்கு வந்து, மோகனாவின் நாட்டியத்தை ரசிக்கிறார்