பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வரதனை நினைந்து வாடுகிறாள் மோகனா. வரதன் சைவனான செய்தி எட்டுகிறது. வரதனுக்குக் குது கல மான வரவேற்பு. கிட்டுவும் சைவனாகிறான். வரதன் திருவானைக்கா கோயில் மடப்பள்ளியில் பரிசாரகனாகச் சேர்க்கப்படுகிறான். தேவியின் அருளால் கவித்துவம் பெற விரும்புகிறான் ஒரு பக்தன்; கோவிலின் ஒரு புறத்தே அம்பிகையின் அருள் வேண்டி நிஷ்டையி லிருக்கிறான். கோயில் கிணற்றடியில் மோகனாவை வரதன் சந்தித்து, இரவு வீட்டுக்குப் போகும்போது இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொல்கிறான். கோயில் காரியங்கள் முடிந்த பிறகு, மோகனா, வரதனைத் தேடுகிறாள்; அவனைக் காணாமையால் வீடு திரும்புகிறாள். கோயில் கதவு சாத் தப்படுகிறது. பக்தன் மட்டும் ஒரு பக்கம் மந்திரம் ஜபித் துக் கொண்டிருக்கிறான். வரதனும், மே கனாவுககாக ஒரு பக்கத்தில் காத்திருக்கிறான். பக்தன் முன் தேவி அழகிய பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள்; அவன் அருகில் சென்று வாயைத் திறக்கச் சொல்கிறாள். தேவியைத் தாசி என்று நினைத்து, விரட்டு கிறான் பக்தன். அதிர்ஷ்டஹlனன்! பிறகு, வரதனிடம் தேவி வருகிறாள். அவன், தேவியை மோகனா என்று நினைத்து வரவேற்கிறான்; அவள் கட்டளைப்படி வாயைத் திறக்கிறான். அம்பிகை, அவன் நாவில் 'ஓம்' என்று சுழி வாங்குகிறாள். அதிர்ஷட சலி "காளமேகம்போல கவி பொழிக" என்று வரதனை ஆசீர்வதித்துத் தேவி மறைகிறாள். காலை மலர்கிறது; கபாடம் திறக்கின்றனர்; கடல் மடை திறந்தாற்போல் கவி பொழிகிறார் காளமேகம். அம்பிகையின் அருள் விளையாட்டு ஊரெங்கும் பரவு