பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கிறது. மோகனா மனம் பூரிக்கிறாள். வீரி முதலியோர் மோகனாவிடம் மன்னிப்புக் கோருகின்றனர் திருமலைராயன்பட்டினம்; அரசன் கொலுவிருக் கிறான். அவனது ஆஸ்தான வித்வான், அதிமதுரகவி மிகக் கொடியவன்; தன் பரிவாரங்களோடு அவனும் வீற்றிருக்கிறான். ஒர் உத்தமக் கவிஞரான முத்துப் புலவர் பரிசு பெற. வருகிறார் அதிமதுர கவிக்கும், அவருக்கும் சபையில் கவி சம்பந்தமாக வாக்குவாதம் நடக்கிறது. நியாயமற்ற முறையிலே அதிமதுர கவியால் அவமானப்படுத்தப்படு கிறார் முத்துப் புலவர். அதிமதுரத்தின் சொற்படி அரச னும் நடககிறான். காளமேகமும், மோகனாங்கியும் உல்லாசமாக இருக் கின்றனர். முத்துப் புலவர் வந்து காளமேகத்தின் பாதத்தில் வீழ்கிறார்; அதிமதுர கவியின் ஆணவத்தை அடக்குமாறு வேண்டுகிறார் மோகனாவிடம் விடை பெற்று இருவரும் திருமலைராயன்பட்டினம் போகின் ஹனா. திருமலைராயன் நகர், அதிமதுரகவி ஆர்ப்பாட்ட மாக பவனி வருகிறான். அவனது அறுபத்திநான்கு தண்டிகைப் புலவர்களும் பின் தொடர்கின்றனர். கட்டியக்காரன் கட்டியங் கூறுகிறான். அனைவரும் 'பராக்' சொல்கின்றனர். காளமேகமும், முத்துப் புலவரும் எதிர்ப்படுகின்றனர். அவர்கள் பராக் சொல்ல வில்லை. கட்டியக்காரன் சொல்லும்படி வற்புறுத்து கிறான். காளமேகம், அதிமதுரகவியைக் கேலியாகப் பாடு கிறார். அதையறிந்த அதிமதுரம் கோபமாகச் செல் கிறான்; அவர் யார் என்பதை வேவு மூலம் அறிகிறான்; காளமேகத்தை மானபங்கம் செய்யத் தீர்மானிக்கிறான்;