21
தாசிகள் சோபனப் பாடல்.
இராகம்:- பீம்பளாஸ்
தாளம்:- சாப்பு
இருகாதலர் சீர் சொல்லி ஆடுவமே—பூங்
காவனக் குயில்போல் பாடுவமே
சீதநன் மாலைகள் சூடுவமே—நாம்
தீவிரமாய் ஒன்று கூடுவமே
இரு பார்வையும் நேர் சந்திப்பாகுதடி—மனப்
பான்மையில் தேன் சிந்திப் போகுதடி
நேரிட்ட காதல் ப்ரவாகத்திலே—இவர்
நீந்துகின்றார்கள் உற்சாகத்திலே—திவ்ய
காதலர் கோயில் விலாசமடி—நல்ல
கனியிதழ் தனில் மந்த காசமடி
ஓதற்கரிய திவர் நேசமடி—இவர்
உள்ளம் வெளியினிற் ப்ரகாசமடி
(இரு காதலர்)
தேவி பக்தன்.
இராகம்:- கௌரிமனோகரி
தாளம்:- ஆதி
எளியேனையாள் உலக நாயகி
ஒளிமேனி காட்டி அருள் செய்குவாய்
துளி ஞானமும் அணுகா என்னைத்
தெளிவே யடையச் செய்குவாய் அன்னை
கமழ் தாமரைப் பதம் காட்டுவாய்
கலையாகிய பால் ஊட்டுவாய்
அமுதானசெந் தமிழ் ஞானமே
அடைவித்தல்உன் கடன்தானமே