25 இராகம்:- சிம்ஹேந்திரமத்திமம் கழியுந் தியகடல் உப்பென்று நன்னூற் கடலின்மொண்டு வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வண்கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னிப் பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே. இராகம்:- கானடா மெச்சுபுகழ் வேங்கட வா வெண்பாவிற் பாதியிலென் இச்சையிலுன் சன்ம மெடுக்கவா மச்சாகூர் மா கோலா சிங்காவா மாராமா ராம ரா மாகோபா லாமாவா வா. இராகம்:- காம்போதி வாரணங்க ளெட்டும் மகமேரு வுங்கடலும் தாரணியு மெல்லாஞ் சவித்தனவால் நாரணனைப் பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த புண்வாயி லீமொய்த்த போது. இராகம்:- புன்னாகவராளி தஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடிமே லிருக்கும் வெஞ்சினத்திற் பற்பட்ட்ால் மீளாது விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம். இராகம்:- பிலஹரி சென்றலரை வென்ற திருமலை ராயன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள்-மற்றையவாள் போவாள் வருவாள் புகுவான புறப்படுவாள் ஆலாளி வாள்வா ளாம்.
பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/26
Appearance