பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் கடிதம் 'ஜனநாயகம் ஆசிரியர், தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ். வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப்படுத்த உரிமையுடையவர்கள். மேலும் அவர்கள் ஈரோடு ஷண்முகா நந்தா டாக்கி: கம் பெனியாருக்கும் நண்பர்கள். நான் பாலாமணிக்குப்? பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப் பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணிக்’குடையவர் கதா சந்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். நான் வீடு திரும்பும்போது, பாலாமணி'யுடைய வரை நோக்கி, பிரதானமாகக் கேட்ட வரம் ஒன்றே ஒன்றது. அண்ணா சம்ப்ரதாயப்படி பாலாமணி’ப் பாடல் களைப் புத்தகமாக நீங்கள் அச்சடிக்கும்போது அதில் பிழையில்லாதிருக்க- ன்னையும் கலந்து கொள்ளுங் கள். அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷனத்தின் எதிர் முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அது மாத்திரமல்ல. நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்