பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தொடங்கும் ஒர் பாட்டைச் சேர்த்ததற்கு என்ன காரணம் என்றேன். 'ஷண்முகாநந்தா டாக்கி’ என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரளிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், கா குகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழை யல்லவா? காரால் பிழை மொழியால் துவக்குவது தானா மங்களகரம்? சரி போகட்டும். வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் மதுரித மொழியுடையாய் ஒரு வார்த்தை சொல்வாய்' என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன். சச்சிதா நந்தனாக நடிக்கும் ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடி விடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டு விடுமாம். முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் முக்கை முதலாளி வெட்டி விடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பது பற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா? -பாரதிதாசன் دسم இதழ் : சினிமா உலகம் 19-9-1937