உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ஒரு பதச்சோறு முறையாகத் தமிழ் பயின்று தேர்ந்த முத்தமிழ் வித்த கர்களே தமிழ்த் திரைப்படங்களின் தொடக்க காலத்தில் கொடிகட்டிப் பறந்தனர். அறுபதாண்டுகளுக்கு முன் ஆற்றல் மிக்க எழுத்தாளர், சமுதாயப் பொறுப்புணர்ச்சி யோடு கலையுலகில் சாதனை புரிந்துள்ளனர் பாடலாசிரி பர்களோ அறுநூறு பேர் தீமையிலிருந்து கரையேறி நன்மை பெறவும், கேடுகள் அழிந்து பண்பாடு தலை திமிர்ந்து வெற்றி பெறவும் மக்கள் பாடம் பெறத்தக்க வகையில் கதைகளைக் கண்டனர் உரையாடல் தந்தனர்; இதயத்தை இசைய வைக்கும் பொருத்தமான நல்லிசை யால் சிறு சிறு பாடல்களை எழுதி மக்களை மகிழ் வித்தனர். தோரணங்கள் வரிசையிட்டுத் தொங்கம் விழாப் பந்தலெனத் தமிழ்ப்படங்கள் அக்காலத்தில் வெளி வந்தன. ஒரு படத்தில் அறுபத்திரண்டு பாடல்கள்! எண்ணிக்கை குறையத் தொடங்கிய முறையிலேயே ஒரு வரலாறு பதிவாகிறது. பத்துப் பன்னிரண்டு இசைக் கருவிகளே பயன்படுத்தப் பெற்றுள்ளன தமிழ்ப் புலவர்களில் தனியிடம் பெற்றவர் கவிஞர் காளமேகம். அவர் கதை பற்றிய தமிழ்த் திரைப்படத் திற்குத் தமிழ்ப்புலவரான பாவேந்தர் பாரதிதாசன் உரை யாடல், பாடல் எழுதினார். 1940இல் உருவான காளமேகம் தமிழ்ப் படத்தில் 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள ஒருபாடலைக் கல்வெட்