உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பாடலும் எழுதி புகழடைந்தார். பின்னர் கவிஞராகவே நடித்தும் காட்டினார். 1940இல் உருவான காளமேகம் திரைப்படப் பாடல் புத்தகத்தை அடைகாத்து வைத்திருந்து, பாவேந்தரின் 108ஆவது ஆண்டு பிறந்தநாளில் வெளியிடுங்கள் என்று அன்புடன் தந்தார் வரலாற்றுக் களஞ்சியம், சுரதா அவர்கள். அத்துடன் கவிஞர்களின் கதைகட்கு உரையும் பாடலும் வரைந்த கவிஞர்கள், புலவர்கள் குறிப்போடு திரைப்படங்களின் பட்டியலையும் தொகுத்தளித்தார். "இவ்வகையில், மற்ற பல கவிஞர்கள் தொடர்புடைய கலை, திரைப்பட வரலாற்றுச் செய்திகளும் தொடர்ந்து நூலாக வெளிவர வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார், விரிந்த நெஞ்சினராம் தம் சுரதா அவர்கள். உடல்நலமின்றி ஓய்விலிருந்தபோதிலும் தன் ஆசான் பற்றிய முதல் திரைப்படப் பாடல் புத்தகம் தக்க சமயத் தில் வெளிப்படுத்திட விரும்பி, புதையலிலிருந்து பேர்த் தெடுத்தளித்த அவரது பெருந்தகைமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் உரித்தாக்குகிறேன். நூலில் புரட்சிக் கவிஞரின் திரைப் பாடல்களுடன் மணிவாசகரின் பாடலும், காளமேகப் புலவரின் பாடலும் கலந்துளளதைக் கண்டு கொள்க. தமிழ்மொழி நடை, கலையுலக நிலையின் போக்கு, வளர்ச்சி, சமய, சமுதாய மாற்றம் முதலியவற்றை ஆய்வோர்கட்கும் இச்சிறு நூல் ஒளிகாட்டி உதவும். பாவேந்தர் பட அனுபவம் பற்றிய ஒரு கருத்துக் கடிதமும் இதில் அடங்கியுள்ளது அரிய கலைஞர்கள் பலர் பற்றிய குறிப்புகளும் படிப்போர் சிந்தனையைக் கிளறிவிடும். தமிழ் ஆர்வலர்கள், கலையார்வம் மிக்கவர்கள், கவிஞர்கள் முதலியோர் திருக்கரங்களுக்குள் திகழ வேண்டிய சிறந்த நூல் இது. . . . . -வெள்ளையாம்பட்டு சுந்தரம்