பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாவேந்தரின் பாட்டுத்திறன் அமுதென்று பேர். நாள் மலர்கள், புகழ் மலர்கள், வேங்கையே எழுக” என்னும் பெரும்பான்மையான நூல்களில் இவ்வகைப் பாக்கள் உள்ளன.”

7. நிலைமண்டில ஆசிரியப்பா: ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பொருந்த எல்லாவடியும் தம்முள் அளவொத்து நாற்சீர் அடியாய் வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. (எ-டு: இந்தான் தமிழில் இருக்கும் எண்களை

அந்தான் அரபியர், ஆங்கில மக்கள் எடுத்தாண்டார்கள்! இதனைஆராய்க! தமிழில் ஒன்றும் இல்லை என்றும் தமிழில் இலக்கியம் இல்லை என்றும் தமிழைத் தொலைக்க வேண்டும் என்றும் கூறும் குறுகிய கொள்கை யுடையோர் எல்லாம் வடவர் சொத்தே என்று சொல்லுவது நாளைய பிணஞ்சொல்லுவதே” இவ்வகை “கதர் இராட்டினப் பாட்டு, பாரதிதாசன் கவிதைகள் 1, 3, 4, முல்லைக்காடு, தேனருவி, பன்மணித் திரள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது, தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், புகழ் மலர்கள்” ஆகியவற்றில் உள்ளது. பாவேந்தரிடம் இவ்வகை குறைவாகவே உள்ளது.”

8. இணைக்குறள் ஆசிரியப்பா: ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பொருந்த முதலடியும் ஈற்றடியும் நாற்சீராயும் இடையடி இரு சீரானும், முச்சீரானும் வருவது. (எ-டு: “யாமிட்ட சோனுகறி எப்படி” என்று

நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர்

வையைத் திறலை, மறியை, வஞ்சியைக்

12. பாரதியாரின் “விநாயகர்நான்மணிமாலை'யில் மட்டிலுமே நேரிசைப் பாக்கள்

உள்ளன.

33. நான் 65 - பக்கம் 62. பாரதியார் இதனை மிகுதியாகப் பாடியுள்ளார்.

விநாயகர் நான்மணிமாலை தவிர, பிற இடங்களில் இவ்வகையே உள்ளது.