பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 89 12. மேலும் சில எண்சீர் விருத்த வகைகள்: பாவேந்தர் எண்சீர் விருத்தங்களில் மேலும் சில வகைகள் காணப்பெறுகின்றன. அவையனைத்தும் ஈரசைச் சீர்களால் இயன்றவை என்பதைத் தவிர, அவற்றிடையே எந்தவித பொதுத் தன்மையும் இல்லை. சீர்களின் அமைப்பிலும் ஒரு சீரான அமைப்பு முறை இல்லை. அவற்றை அடியிற் கண்ட இரண்டு வகைகளில் ஒருவாறு அடக்கலாம்.

மாச்சீர் மிகுதியாய்ப் பயில்வது. (எ-டு) பன்னு முகமாய்ப் பாண்டியன் காண்க

பாரதி தாசன் உரைப்ப திஃதே மன்னு தமிழே திராவிடம் என்று

திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை அன்ன திராவிடம் என்ற பெயர்தான்

ஆயிரம் ஆண்டுகள் முன்பே நமது தென்பால் உள்ள ஐந்துநாடுகளையும்

தெரிவிப்பதாயிற் றுலகுக் கெல்லாம்’

மாச்சீர்கள் ஒழிந்த ஏனைய சீர்கள் மிகுதியாய்ப் பயில்வது. (எ-டு) மண்ணுலகு கடல்மலை அனைத்துமுள்ளாக்கியே

வளைந்தது வானவில் என்னென்ன வண்ணங்கள் விண்முழுது கருமனல் அதன்மீது மாணிக்கம்

வீறிடு நிறப்பச்சை வயிறத் தடுக்குகள் உண்ணிலவு நீரோடை கண்ணையும் மனத்தையும்

உயிரினொடு அன்றியே செல்கின்ற தல்லாமல் எண்ணற்ற அழகினால் இயற்கைவிளையாடலின்

எல்லைகாணேனதைச் சொல்லுமாறில்லையே’

இந்த இருவகைப் பாடல்களிலும் சிறுபான்மை காய்ச்சீர்கள் கலந்தே வருகின்றன. முதல் வகை “கடல்மேற்குமிழிகள், பாரதிதாசன் கவிதைகள் - 2, பன்மணித்திரள், தமிழுக்கு அமுதென்று பேர்,

27. தமிழுக்கு அமுதென்று பேர்- பக்கம் 84 28. பன்மணித்திரள் - 30