பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 91

சந்த விருத்தங்கள்

தாள நடைகளுக்கு ஏற்றவாறு அமைந்த விருத்தங்கள் சந்த விருத்தங்கள் எனப்படும்.

“மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை, ஒன்பான்மை என்று தாளநடைகள் ஐந்து வகைப்படும்.

சந்தமற்ற பாக்களுக்கு அடிப்படை அலகு அசை என்றால், சந்தப்பாக்களுக்கு அலகு சந்த மாத்திரை ஆகும்.

சந்த மாத்திரை அமையும் முறை குறில் ஒரு மாத்திரை; நெடில் தனித்து வரினும், ஒற்றடுத்துவரினும் குறில் ஒன்றடுத்து வரினும் இரண்டு மாத்திரை அடி, அரை இறுதிகளில் வரும் குறில்கள் இரண்டு மாத்திரை பெறும். சந்த விருத்தச் சீர்களிடையே மாத்திரைகள் அளவில் ஒற்றுமை காணப்பெறும்.

14. எழுசீர்ச் சந்த விருத்தம்: (எ-டு) கடவுள் கடவுள் என்றெ தற்கும்

கதறுகின்ற மனிதர்காள்! கடவுள் என்ற நாமதேயம் கதறி டாத நாளிலும் உடைமை யாவும் பொதுமை யாக

உலகு நன்று வாழ்ந்ததாம் கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர்இழைத்ததே’

இதன் ஒவ்வோர் அடியிலும் முதல் ஆறு சீர்கள் மும்மூன்று மாத்திரையும், இறுதிச் சீர் ஐந்து மாத்திரையும் பெறுதல் காண்க. இதே சீர்மை எல்லா அடிகளிலும் காணப்படும். “தகிட” என நடக்கும் மும்மை நடைத்தாளம் இதற்குரியது.”

32. பா.தா.க. பகுதி 1 பக்கம் 133 33. பாரதியாரின் “சயபாரத” (தே.கீ.) என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். இவர் பாடல்களில் “பாரதி தேவாரம்” (வானவில் பதிப்பு- பக்கம் 700-1001) என்ற தலைப்பில் வேறுவகை எழுசீர்ச் சந்த விருத்தம் உள்ளது.