உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு தெறி Y 93 கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும் கொள்கையால் வேதநூலின் கொடுவலையிலேசிக்கி விடுகின்ற போதெலாம்

கொலையுண்ட தமிழர்நெஞ்சும்; துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே

தூயசுய மரியாதையாய்க் சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்

தூய என் அன்னைநிலமே’

இதன் ஒர் அரையடியில் முதல் ஐந்து சீர்களும் ஐந்து மாத்திரை பெற்றும், ஆறாம்சீர் ஏழு மாத்திரை பெற்றும் வரும். இதுவே மற்றைய அரையடிக்கும் பொருந்துவது. இத்தகைய சந்தத்தில் ஒவ்வொரு சீரும் “தகதிகட” என ஐம்மை நடை நடக்கும். இத்தகைய பாடல்கள் “பாரதிதாசன் பாடல்கள்-12 ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றில் சில சீர்களில் மாத்திரை அமைப்பு செப்பமாக இல்லை. ஐந்து மாத்திரைச் சீர்க்குரிய இடத்தில், 6, 7 மாத்திரைச் சீர்கள் வருகின்றன.”

17. வண்ண விருத்தம்: சந்தப் பாவே வண்ணப்பாவாக வளர்ந்தது. சந்தப் பாவில் ஒர் அடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரும் சீர்க்கும் அடுத்த அடியில் அதே இடத்தில் வரும் சீர்க்கும் மாத்திரை அளவில் மட்டுமே ஒருமை இருக்கும் என்ற இயல்பினை மேலே குறிப்பிட்ட சந்த விருத்தங்களில் கண்டோம். ஆனால், வண்ணப்பாவில் அச்சீர்களுக்குள் மாத்திரை அளவோடு குறிலுக்குக் குறில், நெடிலுக்கு நெடில், வல்லொற்றுக்கு வல்லொற்று, மெல்லொற்றுக்கு மெல்லொற்று முதலிய ஒற்றுமைகளும் இருக்கும்.

(எ-டு) பாலாழி மேலினிது கண்துயிலு மாதவனே

மாலேறன் மார்பிலனி வண்துளய மாலையிலே

வந்துமொய்த்தி டுஞ்சிறைப்பொன் வண்டினுக்கி ருந்தமெய்த்த

35. பாதா.க. இரண்டாம் தொகுதி - பக்கம் 138 36. பாரதியாரிடம் இவ்வகைப் பாடல்கள் இல்லை.