பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைகாத்தார்.இப்போது இரண்டும் இறகு முளைத்து ஒன்றன்பின் ஒன்றாக வெளி வருகின்றன. இப்பெருமகனாருக்கு மிக்கநன்றி.

டாக்டர் கலைஞர் கருணாநிதியை, அவர் குழித்தலைத் தொகுதியில் (திருச்சி மாவட்டம்) சட்டமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற காலம் முதல் (அவர் என்னை அறியாவிட்டாலும்) நான் அறிவேன். நான் அப்பொழுது துறையூர் உயர் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த காலம். அவர்தம் அரசியல் வாழ்வை இன்றுவரை கணித்து வருபவன், கல்லூரி எல்லையை மிதியாமல் தமிழ் எல்லையைக் கண்டு கொண்டவர். சங்க இலக்கியம், திருக்குறள் இவை பற்றிய அவர்தம் பதிப்புகள் இதனைப் பறைசாற்றும். திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தோன்றியது இவர்தம் ஆட்சிக்காலத்தில்தான். தமிழுக்காக வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. இத்தகைய தமிழுள்ளம் கொண்டுள்ள தமிழ்ப் பெருமகனார் இந்நூலுக்கு அணிந்துரை நல்கிச் சிறப்பித்தமை இந்நூலின் பேறு; என்னுடைய பேறும்கூட. இந்த உழுவலன்பருக்கு என் இதயங்கலந்த நன்றி என்றும் உரியது.

பேராசிரியர் க.அன்பழகனாரை, அவர் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ., பயின்ற நாள் முதல் நான் நன்கு அறிவேன்.நான் துறையூரில் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய காலம் (1941-50) அது. மாணவப் பருவம் முதல் இன்று வரை பாரதிதாசன் கவிதைகளில் மிக்க ஈடுபாடு கொண்டவர் என்பதை நான் நன்கு அறிவேன். ஆழ்ந்த தமிழ்ப்பற்றுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து, வள்ளுவர் வழி நின்று அரசியலுக்கு வந்தவர். இன்றும் மனச்சான்றுக்கு இடம் அளித்து கலைஞருடன் இணைந்து பணியாற்றுபவர். அவர்தம் வாழ்விலும், தாழ்விலும் இணைபிரியாதிருப்பவர்.அவர் கல்லூரியில் பயின்ற நாள்முதல் நாளிது வரை அன்பு கொண்டிருப்பவர். என்னுடைய தமிழ்ப் பணியை தொடர்ந்து நன்கு மதிப்பிட்டு வருபவர். இத்தகைய நல்லுள்ளம் கொண்ட பேராசிரியர் மீது யான் கொண்டிருக்கும் மதிப்புக்கும், மரியாதைக்கும் நினைவாக இந்நூலை அவருக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன், பெருமிதமும் கொள்கிறேன்.

- -