பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 95

எனத் தொடங்கும் இரண்டாம் அடியில் ஏற்ற எதுகை அமைந்திருப்பதைக் காண்க. இறுதிச் சீராகத் தனதானா” எனத் தனித்து நிற்பது (இங்கு மகன்மேலே என்பது) “தொங்கல்” எனப்பெயர் பெறும். இந்தத் தொங்கல் அடியின் முடிவைத் தெளிவாகக் காட்டி நிற்கும். இப்பாடலின் அடுத்த அடியிலும் ("மூலாவிலாச விழி” என்று தொடங்குவது) மேற்காட்டிய சந்தக் குழிப்பு பொருந்தி வருவதைக் கண்டு மகிழலாம்.

“சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக்காடு, பொங்கல் வாழ்த்துக் குவியல், தேனருவி, கண்ணகி புரட்சிக்காவியம், பன்மணித்திரள், பாரதிதாசன் கவிதைகள் - 4, காதல் பாடல்கள், தமிழுக்கு அமுதென்று பேர்” ஆகிய நூல்களில் வண்ணப் பாடல்களைக் காணலாம்.’

18. தரவுக் கொச்சகக் கலிப்பா: கலித்தளை பெற்று நான்கடியான் வருவது இவ்வகைப்பா. கலித்தளைக்குப் பதிலாக வெண்டளை பெற்று வருதலும் உண்டு.

(எ-டு) தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே

இன்னார் இனியார் எனயாதும் பாராமல் பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ!” “தமிழச்சியின் கத்தி, குடும்ப விளக்கு” ஆகிய நூல்களில் இவ்வகைப் பாடல்களைக் காணலாம்.”

19. தரவினைக் கொச்சகக் கலிப்பா: தரவுக் கொச்சகம் இரண்டு இணைந்து வருவதுபோல் ஒரே எதுகையில் வருவது இப்பெயர் பெறும். இது வெண்டளையாலும் வரும்.

39. பாரதியார் கவிதைகள் (வானவில் பிரசுரம்) பாரதி திருப்புகழ், கண்ணன்மீது திருப்புகழ்’ என்ற தலைப்புகளில் மூன்று வண்ணப்பாடல்கள் காணப்படுகின்றன.

40. தமிழச்சியின் கத்தி - 32 (3)

41. பாரதியாரிடம் வெண்டளை இல்லாத தரவுக் கொச்சகக் கலிப்பாக்களே

காணப் பெறுகின்றன.