பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 97

என்பது காண்க. இதில் எல்லா அடிகளிலும் மோனை சரியாக அமைந்துள்ளது. இன்னும், கட்டளைக் கலித்துறையில் ஈற்றடி மூன்றாம்சீர்ச் சொல் பக்குவிட்டு (வகையுளியாய்) முற்சிரொடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய்வந்தால் சிறக்கும் என்பர் வீரசோழிய உரைகாரர்.

(எ-டு) வேடப்பன் பார்த்துநின்றான்மங்கை

யாள்வரும் வேடிக்கையே!” வள்ளுவனைப்பெற்ற தாப்பெற்ற

தேபுகழ் வையகமே!” இந்த இரண்டு பாடல்களிலும் அவ்வாறு அமைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கது.

“பாவேந்தரின் குடும்பவிளக்கு, பாரதிதாசன் கவிதைகள் - 2, பன்மணித்திரள், புகழ் மலர்கள், வேங்கையே எழுக” என்றநூல்களில் கட்டளைக் கலித்துறைகள் உள்ளன.”

21. கலி விருத்தம்: “அளவடி நான்கின கலிவிருத்தம்மே” என்பது (யாப்பருங்கலம் - 89) இதன் இலக்கணம். பலவகைச் சீரமைப்பையுடையது.

(எ-டு) பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்

ஆலோடு வேரென்றறிந்திருந்தும் ஆளவந்தார் மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி சாலோடு நீரென்று சாற்றாய் கருங்குயிலே” பாரதிதாசன் கவிதைகள்-2இல் இவ்வகை காணப்படுகின்றது.”

22. நூற்பா பெரும்பாலும் ஈரசைச் சீர்களால் ஆகிய அளவடிகள் ஒன்றோ பலவோ பெற்று வருவது நூற்பா ஆகும். ஒரடி நூற்பாக்கள்

45. குடும்ப விளக்கு- 3 பக்கம் 121 46. பாரதிதாசன் கவிதைகள் - தொகுதி-2 பக்கம் 65 47. பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை, பாரதமாதா நவரத்தின மாலை

என்ற இரு மாலைகளிலும் கட்டளைக் கலித்துறைகள் காணப்படுகின்றன. 48. பா.தா.க. தொகுதி-2 பக்கம் 108 49. பாரதியாரின் “கிருட்டிணன்மீது துதி” என்ற பாடல் வெண்டளையற்ற கலி